பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix தமிழ் மொழிக்குப் பல சிறப்புகள் உண்டு. தமிழ் நாட்டிற்கென்று பல சிறப்புகள் உண்டு. தமிழர்களுக்கு என்று பல சிறப்புகள் உண்டு. திருக்குறள்-மொழிக்கும், நாட்டிற்கும் தமிழருக்கும் என்று அனைத்துச் சிறப்பையும் கொடுத்துவிட்டது. திருக்குறள் அனைத்து இந்திய மொழி களிலும் மட்டும் அல்லாமல் உலகில் உள்ள பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுப் படித்தவர்கள் அனைவரையும் வியக்க வைக்கிறது-ஒன்றே முக்கால் சீரடியில் இவ்வளவு பெரிய தத்துவங்களா என்று: அத்தகைய சிறப்புகள் பொருந்திய குறள் அமுதத்தை, நெறியினை, அறிவினை அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கி வரும் ஐயா அவர்களின் திருக்குறள் அதிகார விளக்கம் நம் நாட்டுக் கோடானுகோடி மக்களுக் கும் பயன் படும் என்பது உறுதி. குறிப்பாக இளஞ்சிறார் களுக்கும், மாணவர்களுக்கும் இந்நூல் மிகமிகப் பயனுள்ள தாக அமைந்துள்ளது. ஆசிரியர்களுக்கும் தங்கள் கடமையை மேலும் சிறப்பாகச் செய்ய உதவும் நூல் இது. இப்புத்தகத்தினை நமக்குத் தந்த ஐயா அவர்களின் பொம் கரங்களுக்கு நன்றி. நல்வாழ்த்துக்கள். திருக்குறளார் ஐயா அவர்கள் எங்கள் ஊருக்கு வர மாட்டாரா? அவர் பேச்சை நாங்கள் கேட்க மாட்டோமா? என்று ஏங்குபவர்கள் பலருண்டு. அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டாரா? அவர் பேச்சின் நகைச்சுவையை இன்னும் கொஞ்சநேரம் கேட்கமாட்டோமா? என்று ஏங்குபவள் களும் உண்டு.