பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 காலமறிதல், கல்வி,அறிவுடைமை,ஆள்வினைலியுடைமை சொல்வன்மை, அறன்வலியுறுத்தல் முதலிய அதிகாரங்களின் திரண்ட கருத்துரைகள் இந்த அதிகாரத்துடன் வைத்து எண்ணப்பட வேண்டியவைகளாகும். முதற்குறட்பா நான்கு, வகைகளை எடுத்துக்காட்டி அமைச்சர் கடமையினைக்கூறும், அதுவே போல இரண்டாம் குறட்பாவும் அமைச்சரின் ஐந்து கடமையினைக் கூறுகின்றன. மூன்றாம் குறட்பாவும். அவ்வாறே கடமையினையும் கூறுகின்றது. செயல்முறை. யினையும் நான்காம் குறட்பாவும் அவ்வாறே அறிவுறுத்து கிறது. சொல்வன்மை அறிவையும் உடன்இணைத்து ஐந்தாம் பாடல் கூறுகின்றது. நூலறிவினையும் மதிநுட்பத். தினையும் ஆறாம் பாடல் குறிக்கின்றது. மதிநுட்பம்-அதி. நுட்பம் கல்லாதான் ஒட்பம் வினைத் திட்பம் என்பவை. களைச் சிந்தித்தறிந்து பொருள் வேறுபாடுகளை உணர்தல், சிறப்பாகும். & - நூல் நெறியேயானாலும், உலக நெறியோடு பொருந் தாதனவற்றைச் செய்யாதே; செய்தால் அது பழிப்புக்கு இட மாகும் என, இயற்கை அறிவால் பயனை ஏழாம் குறட்பா கூறிவைக்கின்றது. இத்துடன், உலகத்தோடு ஒட்ட ஒழுகல்" எவ்வது உறைவது உலகம்’-நுண்ணிய நூல் பல கற்பி னும் என்று தொடங்கப் பெறுகின்ற குறட்பாக்களையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஒன்பதாம் குறட்பா எழுபது கோடி' என்று உலக வழக்கில் வைத்துக் காட்டிற்று. "மாண்டது அமைச்சு" என்று இரண்டு குறட்பாக்களும், வல்லது அமைச்சு என்று இரண்டு குமட்பாக்களும் குறிப் பிடுகின்றன. சிறப்பினை அறிவித்தனவாகும். திறன் அறிந் தான், யாவுள முன்னிற்பவை-இயற்கை அறிந்து செயல்கூறல் கடன்-என்பதெல்லாம் அமைச்சரின் மேலான அறி. வின்ையும் கடமையினையும் உணர்த்துவனவாகும். எண்ணி றந்த பகைவர்களைவிடி தீமையுண்டாக்கும் அமைச்சர்களும். இருத்தல் கூடும் என்பதனை ஒன்பதாம் பாடல் குறித்துக் காட்டுகிறது. . . . . -