பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 தாகும். அச்சு என்பது உருள்கோத்த மரமாகும். அந்த அச்சு இனி தப்பாது' என்று துணிந்தவுடன் வினையினைச் செய்துவிடல் வேண்டும். தயங்கி நீட்டித்தல் கூடாது. அது தீது: காலம் தாழ்த்துவதால் பகைவர்கள் அறிந்து கொள்ள அம் கூடும். ஆதலால் உடனே செய்க: இக்கருத்தினையெல்லாம் முதற்குறட்பா விளக்குகிறது. சில செயல்களை நீட்டித்தே செய்தல் வேண்டும்; சிலவற்றை நீட்டியாவது செய்தல் வேண்டும். அறிவு ஆற்றல்களினால் ஆராய்ந்து அறிதல் வேண்டும். இவ்வுண்மையினை இரண்டாம் பாடல் தெளிவாக்குகிறது. வினை செய்யுங்கால் இயலுமிடமெல்லாம் போரால் செய்தல் நல்லதேயாகும். பகைவனைவிடத் தான் வலிய ராக இருக்கும்போதே இவ்வாறு செய்தல் சிறப்பான தாகும். அதற்கே அஞ்சுவார்கள். மற்ற காலங்களில் வேறு முறைகளில் செய்தல் வேண்டும், இதனை மூன்றாம் பாடல் நன்கு எடுத்துக்காட்டுகிறது. தீயினை உவமை காட்டி நான்காம் பாடல் கூறுகிறது. குறை வைத்து செய்தல் கூடாது என்பதாகும். தொழிலில் மீதி வைப்பதும், பகையினை அறவே ஒழிக்காது வைப்பதும் தவறு. சிறிதேயாயினும் தீயினை விட்டு விட்டால் அது சிறுகச் சிறுகப் பெரிதாகித் தீங்கு செய்வது போலாகி விடும். "இக்குறை என்செய்யும் என்று இகழ்ந்திருக்கக் கூடாது. ஐந்தாம் பாடல் மிகவும் நுணுக்கமாக ஆராய வேண்டி யனவற்றைக் கூறுகின்றது. வினை செய்யுங்கால், அழியும் பொருள் எவ்வளவு: ஆகும் பொருள் எவ்வளவு, தன்சேனை மாற்றான் சேனை, தனக்கு ஆகும் காலம், அவர்க்கு ஆகும் காலம், தான் வன்மையாகச் செய்யும் வினையும் அவர்கள் செய்யும் வினையும், தான் வெல்லும் இடமும் அவர்கள் வெல்லும் இடமும்-ஆக இவையனைத்தையும் நன்கு