பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 7 நிலை மூன்றுவகையாகக் கூறப்படும். அவைகளுள் வலியான் சிறப்பினை மூன்றாம் குறட்பா காட்டுகிறது. வலியான் செய்யும் திறம் நான்காம் பாடலால் விளக்கப்பட்டது. ஐந்து, ஆறு, ஏழு பாடல்கள் ஒப்பான் செய்யும் தி றத் தினைக் கூறுகின்றன. மெலியான் செய்யும் திறத்தினைக் கடைசி மூன்று பாடல்கள் தெளிவுபடுத்துகின்றன. பெரும் பாலும் போர் நடத்தும் முறைகளையே கூறுவதால் பகை வர்களைப் பற்றி விளக்கியும், வலியார், மெலியார், ஒப்பார் இவர்களையறிந்தும் செய்வன கூறப்பட்டன. மேற் கொண்டு செய்வதன் முறைகளைக் கண்டறிந்து, கொள்ள வேண்டும் என்று ஏழாம் பாடல் குறிக்கிறது. எட் டாம் பாடல் யானையைக் கொண்டு யானையைப் பிடிப்பது போன்று ஒரு தொழிலைக் கொண்டு மறு தொழிலினையும் முடித்துக் கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தும் கருத்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதொன்றாகும். . o இதன் அருமைநோக்கி, யானையால் என்று மட்டும் கூறாமல், நனைகவுள் யானை என்றார். மதம்பிடித்த யானை என்பதாகும். பகைவன் தன்னுடைய மெலிவைத் தெரிந்து கொள்வதற்கு முன்னமேயே, பகைவனுடைய பகைவனைத் தான் நட்பாக்கிக் கொள்ளல் வேண்டுமென்று. ஒன்பதாம் பாடல் கூறும். தம்மைவிட வலியார் தாக்கியபோது, தனது சேனை யும் மக்களும் அஞ்சுவது கண்டு முடியுமானால் வலிய பகிை வனிடம் சமாதானம் செய்து கொள்ளுதல் நல்லதேயாகும். வாய்ப்பு இருக்குமானால் என்றும் கூறினார். தாழ்ந்து போதல் குற்றம் ஆகி விடாது. பத்தாம் பாடல் மிகவும்: சிந்திக்கத்தக்கதாகும். .