பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 இருக்கும் அவையினை, புல்லவை' என்று ஒன்பதாம் பாடல் கூறுகிறது. அப்படிப்பட்ட அவையினையே, தம்கணத்தர் அல்லார் என்று பத்தாம் பாடல் குறித்துக் காட்டுகிறது. 73. அவை அஞ்சாமை சொல்லுதற்குரிய அவையினை அறிந்து சொல்லுங்கால் அதற்கு அஞ்சுதல் கூடாது என்பதனைக் கூறுவதாகும். முதல் மூன்று பாடல்களும் அவையினை அஞ்சாரது சிறப்பி னைக் கூறுகின்றன. நான்காம் பாடல் அதனால் வரும் பயனைக் கூறுகின்றது. ஐந்தாம் பாடல் அதன் காரணத் தைக் கூறுகின்றது. அவையினைக் கண்டு அஞ்சுவாரது இழிவினைக் கடைசி ஐந்து குறட்பாக்களும் விளக்கிக் கறுகின்றன. ஆறாம் குறட்பா அருமையான உவமை முகத்தான் கருத்தினை விளக்கிக் காட்டுகிறது. வீரம் இல்லாதவர் களுக்கு வாளுடன் என்ன தொடர்பு உண்டு? அதுவே போல, அறிஞர்கள் நிறைந்திருக்கும் சபையினைக் கண்டு அஞ்சுபவர்களுக்கு கற்ற நூல்களோடு என்ன தொடர்பு உண்டு அவையைக் கண்டு அஞ்சுபவன் கற்ற நூலானது, .பகைவர்களின் மத்தியில் அஞ்சுகின்ற பேடிகையில் வைத் திருக்கும் கூர்மையான வாளினை ஒக்கும் என்று ஏழாம் பாடல் கூறி அவையஞ்சுவானுடைய இழிநிலையினைக் கூறுகின்றது. பத்தாம் குறட்பா அவையினைக் கண்டு அஞ்சுபவர்களை இறந்து போனவர்களுக்கு ஒப்பிட்டுக் கூறுவது மிகவும் சிந்திக்கத்தக்கதாகும். உளர் எனினும் இல்லாரோடு ஒப்பா' என்று குறட்பா அழைத்துக் காட்டுகிறது. கற்ற வற்றைப் பிறர் அறிய அவையில் சொல்ல அஞ்சுபவன் உயிரோடு இருந்தும் பயனில்லை என்பதாகும். சொற்களின் தன்மையினைக் கண்டு, அளவு முறையினை அறிந்து, பேசும்