பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரையாக சில சொற்கள்

எண்ணரிய பிறவிதனில் மானிடப் பிறவிதான் யாதிலும் அரிது' என்ற பொன்னுரைகளை மகான் தாயுமானசுவாமிகள் அருளினார். - . .

உயர்ந்த மானிடப் பிறவி பெற்றிருக்கும் ஒவ்வொரு வரும் நன்னெறிக்கண் வாழ்ந்து, புகழுடனும், சிற்ப் புடனும் கடமையாற்றிச் செயல் புரிவதைத் தான் இன்றி. யமையாக் கடமையாகக் கொள்ளுதல் வேண்டும். உலகப் பொதுமறையான திருக்குறள் வாழ்க்கைக்கு வழி வகுத்து வாழ வேண்டிய முறையில் வாழ்வதற்குப் பெரும் துணையாக இருப்பதாகும். திருக்குறளில் காணப் படுகின்ற 133 அதிகாரங்களுக்கும் சுருக்கமாகப் பொழிப் புரை போன்று எழுதியுள்ளேன். இந்தச் சிறிய நூலினை 30 ஆண்டுகளுக்கு முன்னதாக எழுதி வைத்திருந்தேன். தமிழறிஞர் உயர்திரு. ஏ. திருநாவுக்கரசு அவர்கள் :வானதி பதிப்பகத்தின் மூலம் தமிழ் இலக்கியத்திற்குச் செய்துவரும் தொண்டினை எளிதில் எடுத்துச் சொல்லிவிட முடியாது. அவ்வளவு பெரிய சேவை அவர் செய்து வருகிறார். சிறியேனுடைய இந்த நூலினையும் அவர் வெளியிடுவதுதான் எனக்குப் பெருமை.