பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 1 {} ஒன்பதாம் பாடல் கூறுகிறது. காலத்திற்கேற்றபடி மறவர்கள் போர்புரிந்து முறைப்படி பற்பலவும் செய்தல் வேண்டும் என்பதனை வினை முகத்து வீறு எய்தி' என்ற குறிப்பு உணர்த்தி விடுகின்றது, எல்லாக் காலத்திற்கும் பொருந் துவன கூறுவது ஆசிரியரின் கருத்தானபடியால் "இச் செயல்தான்' என்று எதையும் குறித்துக் காட்ட வில்லை. எவ்வளவு சிறப்புடையதாக அரண் அமைக்கப் பட்டிருந்தாலும், மறத் தொழிலில் சிறப்பானவர்கள் @ಮೆ 576) யென்றால் பயனில்லையென்று பத்தாம் பாடல் கூறுகிறது. 76. பொருள் செயல் வகை அரசியலில் கூறப்படும் இன்றியமையாத ஒன்றான படியால் சிறப்பாக அரசனுக்கு உரியது என்றாலும் உலகில் வாழும் மக்கள் அனைவர்க்கும் பொதுப்படக் கொள்ளுதல் வேண்டும். பகைவனை வெல்லும் கூர்மையான கருவி பொருள் என்று கூறப்படுகிறது. அரசனுக்கே பெரிதும் உரியது என்பதனைக் குறிக்க வேண்டி, வேந்தன்' என்று ஆறாம் குறட்பா குறித்துக் காட்டுகிறது. அறிவிலாதார், இழிதன்மையர், இன்னும் இன்னோரன்னவர்களையும் பொருளாக மதிக்கச் செய்வ தால் பொருளல்லதில்லை பொருள்' என்று முதற் குறட்பா கூறுகின்றது. - - - அறிவுள்ளவர்களும், சான்றோர்கள், இவரி போன்ற பெருந்தகையாளர்களும், இழிமகன் என்று இருந்தாலும் அவனிடம் சென்று பொருள் கேட்கும்படிச் செய்வதால் "பொருள் அல்லது இல்லை பொருள்" என்று முதற் குறட்பா விளக்கமாகக் கூறுகின்றது. உலகத்தின் இயல்பினைக் குறிக்க வேண்டி எல்லாரும் எள்ளுவர்" என்று இரண்டாம்