பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 மூன்றாம் குறட்பா, நாகத்தினையும் எலிகளையும் காட்டி உண்மை உணர்த்துகின்றது. வீரர் அல்லாதார். பலர் கூடுவதில் பயனே இல்லை என்பதாகும். இவர்களை விட வீரனாக ஒருவனைக் கொள்ளுதலே சிறப்பாகும். உள்ளுக்குள் இருந்தே தீங்கு செய்பவரைக் கொள்ளாதிருக்க வேண்டும் என்பது நான்காம் பாடலின் கருத்தாகும். அறை. போகாது ஆகி' என்று கூறுகின்றது. ஐந்தாம் குறட்பா இறப்பதற்குக் கடுகளவும் அஞ்சாத வர்கள் இருப்பதே படையென்று கூறுகிறது. இறப்பது உறுதி என்று தெரிந்தாலும், நாடும் மக்களும் காப்பாற்றப் படுவர் என்று எண்ணி - இறப்பினை அஞ்சாதவர்களைக் கொண்டதே படையென்பது ஐந்தாம் பாடலின் குறிப்பா கும். கூற்றினை எதிர்ப்பது என்றால், இறப்பது உறுதி' என்றே பொருளாகும். -. v. படைக்குப் பாதுகாப்பாக உள்ள நான்கும் ஆறாம் பாடலில் கூறப்படுகிறது. போர் செய்வதற்குப் படைகளை எவ்வாறு வகுத்துக் கொள்ள வேண்டும் என்று குறித்துக் காட்டுகிறது, ஏழாவது குறட்பா. காலத்திற்கும் இடத்திற். கும் ஏற்றபடி செய்து கொள்ளவேண்டியபடியால் பொதுத் தன்மை மட்டும் கூறப்பட்டது. - - உலக வழக்கில் கம்பீரம் என்று சொல்லுவது போல், தோற்றம் பொலிவு சேனைக்கு இருக்க வேண்டும் என் பதனை, படைத்தகை' என்று கூறி எட்டாம் பாடல் விளக்கம் தருகிறது. சிறுமையும், வறுமையும் படையினைக் கொல்லும் என்பது ஒன்பதாம் பாடல் வீரர்கள் நிறைற் திருந்தாலும் தளபதிகள் இன்றியமை யாதவர்கள் என்ற உண்மை பத்தாம் பாடலால் கூறப்படுகின்றது. வெல்படை - தொல் سامه با - நாகம் - வன்கணதுவே பன்ட-ஆற்றலதுவே படை ஏமம் படைக்கு - போர்தாங் கும் தன்மை - படைத்தகையால் - இல்லாயின் வெல்லும்