பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 பொறுக்கப்படும் குற்றம் செய்தவர்களானால் பழைமை. கருதி பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பதாகும். பழைமை என்பதற்கு முதற்குறட்பா நன்கு விளக்கம். தருகிறது. பழைமை என்று சொல்லப்படுவது யாது. என்றால், அது பழைமையோர் உரிமையால் செய்வன வற்றைச் சிறிதும் தவறாகக் கருதாமல் அவற்றிற்கு உடன் படும் நட்பாகும். இரண்டாம் மூன்றாம் பாடல்கள் பழைமையான் வரும் உரிமையது சிறப்பினைக்கூறுகின்றன. நட்பிற்கு. உறுப்பு" என்று இரண்டாம் பாடல் கு றி த் து க், காட்டுவதும் செய்தாங்கு அமையாக் கடை" என்று மூன்றாம் பாடல் கூறுவதும் பழைமை என்பதன் விளக்கத் தினைத் தெளிவுபடுத்துகின்றன. நான்காம் பாடல்" பிழைதகையான்வேண்டி இருப்பர்' என்று எடுத்துக் காட்டிப் கெழுநண்பர்களின் மன ஒற்றுமையினை மெய்ப்படுத்து கிறது. நண்பர்கள் சிலநேரங்களில் வெறுக்கத் தக்கனவற்றை செய்துவிட்டால் அதற்கு யாது காரணமாக இருக்கமுடியும் என்பதனை ஐந்தாம் பாடல் தெளிவுபடுத்துகிறது. இக்குறட்பாவில், அப்படித் தவறு செய்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்று, குறிப்பிடுகிறது. ஒன்று, பேதைமை" அல்லது பெருங்கிழமை." இந்த இரண்டு சொற்களும் ஐந்தாம் பாடல் கருத்தினைத் தெளிவுபடுத்து. கின்றன. - ஆறு, ஏழாம் பாடல்கள், அவ்வாறு பழைய நண்பர்கள் கேடு செய்த போதும் விட்டுவிடக் கூடாது என்பதை விளககு கின்றன. நல்ல நட்புக்கு அதுவே அறிகுறியாகும். 'தொல்லைக் கண்நின்றார் தொடர்பு" என்று ஆறாம். பாடலும், கெழு தகைமை வல்லார்க்கு’ என்று கூறும் ஏழாம். பாடலும் அரிய உண்மையினை வெளிப்படுத்துகின்றன.