பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பாடல் இவர்களின் பேச்சினால் ஏமாறுதல் கூடாது என்பதைக் குறிக்க வேண்டி, சொல்லினால் தேறற்பாற்று அன்று என்று அமைத்துக் காட்டுகிறது. இவர்கள் ஒட்டார்" என்று ஆறாம்பாடல் கூறும். இந்த ஆறாம் பாடலுடன் மானம்' அதிகாரத்தில் வரும் ஏழாம்பாடலையும் கருதுக. இவர்கள் வணக்கமான சொற்களைச் சொன்னால் அதுவும் நமக்குக் கெடுதியைக் கொடுப்பதற்கேயாகும். வில்வளைவது எதற்கு என்று நினைவுபடுத்தி ஏழாம்பாடல் விளக்குகின்றது. இவர்கள் அழுவதுபோல் காட்டுவார்கள்; கையால் தொழுவார்கள். எல்லாம் நமக்குத் தீமை செய்வதற்கே என்று எட்டாம் பாடல் எடுத்துக் காட்டும். இத்தகையவர்களிடம், நாமும் உண்மையாகப் பழகா மல், அவர்கள் போலவே பழகி காலம் வந்தபோது அவர் களின் நட்பினை அறவே அழித்தொழித்து விடவேண்டும் என்று ஒன்பதாம் பத்தாம் பாடல்கள் நன்கு தெளிவுபடுத் து கின்றன. இவர்களிடம் நாம் உள்ளன்புடன் பழகுவது தமக்கே கெடுதலாகுமாம். 84. பேதைமை இது ஒரு குற்றமான குணமாகும். அறிவற்றவர்களும் அறியாமை கொண்டவர்களுமாவார்கள். நல்லனவற்றை நீக்கித் தமக்குக் குற்றம் வருவதையே நாடி மேற் கொள்ளு பவர்கள் பேதைகளாவார்கள் என்று முதற் குறட்பா சுருக்க மாகவும் தெளிவுபடுத்தியும் கூறுகின்றது. முதலிரண்டு குறட்பாக்களும் பேதைமையது. இலக்கணத்தைக் கூறு கின்றன. . * பொது வகையான், பேதையது தொழிலினை மூன்றாம், நான்காம் பாடல்கள் எடுத்துரைக்கின்றன. ஐந்தாம் ஆறாம் பாடல்கள் பேதை தனது செல்வத்தினால்