பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$35 என்ன செய்து கொள்ளுவான் என்பதனைக் கூறுகின்றன. அப்பேதை செல்வம் பெற்றிருந்தால் அது எவ்வாறு பயன் படும் என்பதை ஏழு, எட்டு பாடல்கள் விளக்குகின்றன. ஒன்பதாம், பத்தாம் பாடல் அவனுடைய நட்பின் குற்றத்தி னையும், அவன் இருக்க வேண்டிய இடத்தினையும் முறையே கூறுகின்றன. - ஏதம் கொண்டு ஊதியம் போகவிடல்' என்பதுதான் பேதையானவன் செய்வதாகும் என்று முதற் குறட்பா காட்டுகிறது. நூலோர் செய்யத்தகாது என்று கூறிய வற்றின் மேல் காதல் கொள்ளுவது பேதையின் வழக்கம் என்பதை, காதன்மை செயல்’ என்று இரண்டாம் குறட்பா சொல்லுகிறது. பேதையின் தொழில், நான்கு வகைகளாகப் .பிரிக்கப்பட்டு மூன்றாம் குறட்பாவில் குறிக்கப்படுகின்றது. "தான் அடங்காப் பேதை" என்பது நான்காம் குறட்பா எடுத்துக் காட்டுவதாகும். ஒதுவான், உணர்வான், பிறர்க்கும் உரைப்பான்-ஆனால் தான்மட்டும் அடங்க மாட்டான். இவனே பேதை என்கிறது நான்காம் குறட்பா. அவன் தனக்குத்தானே வரவழைத்துக் கொள்ளும் கொடிய தீமைகளை, அழுந்தும் அளறு புனை பூணும்" என்று முறையே ஐந்து, ஆறு பால்டகள் புலப்படுத்துகின்றன. பேதையின் செல்வம் யார் யார்க்கோ பயன்படுவதாகும். உற்றார், உறவினார் நண்பர்களுக்கு உதவாது. அவனிடத்தில் செல்வம், இருப்பது, பித்துப்பிடித்தவன் கள் குடித்தது போன்றதாகும். இதனையெல்லாம் எட்டு.ஒன்பது குறட்பாக்கள் எடுத்துரைக்கின்றன. பேதை புகல்" என்று பத்தாம் குறட்பா எடுத்துக் காட்டி, சான்றோர் அவையில் பேதை செல்லுதலே கூடாது என்று விளக்கம் செய்கின்றது. பேதையின் இழிவு பத்தாம் பாடலில் தெளிவாக்கப் வடுகிறது.