பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் அமைப்பு முறை திருவள்ளுவர் அருளிய உலகப் பொதுமறை என்னும் திருக்குறள், அறத்துப்பால், பொருட்பால், காமத் துப்பால் என்று மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது அறத்துப்பாலில் பாயிர இயல், இல்லற இயல், துறவற இயல்' என்ற மூன்று சிறு பிரிவுகள் அடங்கி யுள்ளன. - - - : பொருட்பாலில் அரசியல்’, ‘அங்க இயல், ஒழிபு இயல் என்ற மூன்று பிரிவுகள் அடங்கியுள்ளன. காமத்துப்பாலில், களவு இயல்’, ‘கற்பு இயல்' என்ற இரண்டு இயல்கள் உள்ளன. அறத்துப்பாலில் 38 அதிகாரங்களும், பொருட்பாவில் 70 அதிகாரங்களும், காமத்துப்பாலில் 25 அதிகாரங்களும் ஆக மொத்தம் 133 அதிகாரங்கள் திருக்குறளில் அடங்கி யுள்ளன. அதிகாரம் ஒன்றுக்குப் பத்துக் குறட்பாக்கள் உள்ளன. ஆக மொத்தம் குறட்பாக்கள் 1330 ஆகும்.