பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 38 இதனை உலகில் வழக்கமாகப் பேசும் பேச்சில் rாத்திரம்" என்று கூறுவதுண்டு. மனதில் ‘இகல் குடி கொண்டு விட்டால் அது வளர்ந்து கொடிய பகைமையான எண்ணத்தினை உறுதி செய்து விடும் என்பதாகும். முளையிலேயே இகல் வரக்கூடாது என்று அறிவுறுத்து. கிறார். - ‘இகல்’ என்பதன் குற்றம் முதற் குறட்பாவில் கூறப்படு கிறது. இரண்டு முதல் நான்கு குறட்பாக்கள் வரை இகல் என்னும் தீய குணம் இல்லாதார்க்கு வரும் நன்மை கூறப் பட்டது. ஆறாம் ஏழாம் குறட்பாக்கள் இகலினைக் கொண்டவர்களுக்குத் தீங்கு வரும் என்று குறிக்கின்றன. கடைசி மூன்று குறட்பாக்களும், இசுல் நீங்குவதால் வரும் நன்மையினையும், இகல் உடைமையால் வரும் தீமையினை யும் கூறுவனவாகும். ஒன்றுபடுவோம் என்பதற்குக் கொடிய பகைவனாக இருப்பது இகல் என்று முதற் குறட்பா கூறி 'பகல் என்னும் பண் பின்மை பாரிக்கும் நோய்' என்று குறிப்பிட்டுக் காட்டு. கிறது. இரண்டு மூன்று குறட்பாக்கள் ‘இகல்" ஒழிக்கப்பட வேண்டும் என்ற அரிய எண்ணத்தினை, இன்னா செய்யாமைதலை" - "தாவில் விளக்கம் தரும்' - என்று முறையே குறிப்பிட்டுக் கூறுகின்றன. இகல் நீங்குவதால் வரும் இன்பத்தினை, நான்காம் குறட்பா, இன்பத்துள் இன்பம் பயக்கும்’ என்று அருமை யாகக் குறித்துக் காட்டுகிறது. இகல் என்பதனை துன்பத். துள் துன்பம் என்றும் குறிக்கின்றது. இகல் நீக்கப்பட்டுவிட்டால், அப்படிப்பட்டவர்களை வெல்வதற்கு யாரே இருக்கின்றனர் என்று ஐந்தாம் குறட்பா விளக்குகின்றது. வல்லாரையாரே என்று ஐந்தாம் குறட்பா வில் காணப்படுவது சிந்தனைக்குரியதாகும்.