பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 47 தற்றால்’ என்று நான்காம் பாடல் கூறி, அறிவுறுத்துகிறது. ஐந்தாம் பாடல், உளராகார் ஆறாம் பாடல் உய்யார்’ என்று கூறுவதும், பெரியார்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனை வற்புறுத்தி நன்கு விளக்கம் தருகின்றது. பெரியாராகிய தவத்தோர்களைப் ப ற் றி க் கூறு கின்ற ஏழு, எட்டு, ஒன்பது, பத்து ஆகிய பாடல்கள், தகை மாண்டதக்கார் செறின் - குன்றன்னார் குன்ற மதிப்பின் - ஏந்திய கொள்கையார் சீறின் - சிறந்தமைந்தசீரார் செறின் - என்று முறையே பெரியார்களின் அரிய பண்பு களை எடுத்து விளக்குகின்றன. குன்றன்னார் குன்ற மதிப்பின்’ என்ற எட்டாம் பாடல், குணம் என்னும் குன்றேறி நின்றார்" என்று நீத்தார் பெருமையில் வரும் அதிகாரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தற்குரியது. 91. பெண்வழிச் சேறல் தன் வழி ஒழுகற்பாலனாகிய இல்லான் வழியே தான் அஞ்சி நடப்பதாகும். பெண்வழிச்சேறல் என்பது கழிபெரும் காமத்தால் இல்லாள் ஏவலுக்குத்தான் அடங்கி நடத்தல் ஆகும். இது தவறு. ஆண்பெண் இரு பாலரும் கணவன் மனைவியாக வாழும் இயல்புபற்றி கணவன் சொற்படி மனைவி நடத்தலாகும். கணவனுக்கேற்ற மனைவியாக-சிறந்த துணையாக இருத்தல் வேண்டும். வாழ்க்கைத்துணை நலம்" என்ற அதிகாரத்தில் இல்லாளின் பெருமை, கடமை அனைத்தும் கூறப்படுகின்றன. பெண்ணின் பெருந்தக்க யாவுள' என்று கூறப்பட்டிருப்பதும், ஒருமை மகளிரே போல’ என்று கூறப்பட்டிருப்பதும் பெண்ணின் பெருமையினை எடுத்துக் கூறுவனவாகும். சிற்றின்பம் காரணமாக கழிபெருங்காமத் தால் பெண்ணிற்கு அஞ்சி, அடங்கி, குற்றேவல் செய்பவ ಗಿವೆ' இழிநிலையினை இவ்வதிகாரம் கூறுகின்றது.