பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 என்ற ஆறாம் பாடலும் நற்குடிப்பிறந்தார்களுக்கு விளக்கம் கூறுகின்றது. மதிக்கண் மறுப்போல் உயர்ந்து என்று குறிப்பிடுகின்ற ஏழாம் குறட்பா சிறிய குற்றம் கூட நற்குடிப் பிறந்தாரிடம் உண்டாகி விட்டால் அது பலரும் அறியும்படி ஆகிவிடும் என்று ஏழாம் குறட்பா குறிக்கின்றது. அன்பு என்பது நற்குடிப் பிறந்தாரிடம் இயல்பாக இருந்தாக வேண்டும் என்று எட்டாம் குறட்பா உணர்த்து கிறது. நிலத்தில் முளைத்த முளையினைக் கொண்டு நற்குடிப்பிறந்தார் தன்மையினை மிகமிக அழகுற எடுத்துக் காட்டுவது ஒன்பதாம் குறட்பாவாகும். அ வ ரீ க. ஸ் எப்போதும் இனியசொற்களே பேசுவார்கள். நாணுடைமை யும்,பணிவும் எப்போதும் உயர்ந்த குடிமக்களிடம் இருக்கும் என்பது பத்தாம் பாடல் குறிப்பதாகும். 97. unnsbrüo நற்குடியில் பிறந்தவர்களிடம் காணப்படும் உயர்ந்த பண்புகளில் மானம் என்பதும் ஒன்றாகும். அதாவது எக் காலத்திலும் தனது நிலையில் தாழாமையும், ஊழ்வினை யால்-அதாவது இயற்கையால் தாழ்வு வந்த போது உயிர் வாழாமையும் ஆகும். 'மானம்' என்பதற்கு, அளவு என்று கூறுதல் உண்டு. தீர்மானம்' கட்டுமானம்' என்பன உலகியல் வழக்குச் சொற்காள கும். மனிதன் எதையும் செய்து வாழலாம் என்று வாழ்தல் கூடாது. மனிதப் பிறப்பு இன்ன செயல்களைச் செய்துதான் வாழவேண்டும் என்று அளவு உண்டு. ஆதலால்தான் மனிதத் தன்மைக்கு மீறி குறைவு, இழிவு ஏற்பட்டு விடுமானால் உயிர் வாழாமை உண்டு எனக் குறிக்கப்பட்டது. தன் குடிப்பிறப்புக்குத் தாழ்வான செயல்களைச் செய்தால் உயர்ந்த நிலை உண்டாகும் என்றாலும், நற்தடியிற் பிறந்தார்கள் அதனைச் செய்ய மாட்டார்கள்.