பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 குன்றவருபவிடல்" என்று முடியும் முதற்குறட்பா இக்கருத்தினைப் புலப்படுத்துகிறது. முதன்மூன்று பாடல் களும் தாழ்வதற்குக்காரணமான செயல்களைச் செய்யாமை யினது சிறப்பினைக் கூறுவதாகும். நான்கு, ஐந்து, ஆறு பாடல்கள் அவ்வாறுசெய்தால் வருகின்ற குற்றம் இன்ன தென்பதனைத் தெளிவுபடுத்துகின்றன. கடைசி நான்கு பாடல்களும், மானத்தின் பொருட்டால் இறப்புண்டானால் அதுசிறப்பேயாகும் என்று கூறுகின்றன. சிரோடு பேராண்மை வேண்டுபவர்’ என்று மானமுள்ள வர்களை, இரண்டாம் பாடல் குறித்துக் காட்டி அப்படிப் பட்டவர்கள் புகழ் தேடும் பொருட்டும் தம்முடைய உயர்ந்த குடிப்பிறப்பிற்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார் கள் என்று கூறுகின்றது. நற்குடியில் பிறந்தவர்கள் செல்வப்பெருக்கத்தில் பணிவு கொண்டிருத்தல் வேண்டும் என்றும், செல்வம் சுருங்கிய போது பணியாது பெருமையுடன் இருக்கவேண்டுமென்றும் குறிப்பிடுகிறது, பணியாமை என்பது தாழ்வு வாராமை யினைக் குறித்ததாகும். மக்கள் தங்கள் மக்கட் பிறப்புக்கு ஒவ்வாத செயலினைச் செய்து விடுவார்களானால் மிகவும் இழிவான நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவர் என்னும் கருத்தினைத் தலையி னிழிந்த மயிருக்கு ஒப்பிட்டுக் காட்டுகின்ற நான்காம் குறட்பா பன்முறையும் சிந்திக்கத் தக்கதாகும். ஐந்தாம் குறட்பா, மிகவும் பெரியமனிதராக இருப்பவர் களும் மிகச் சிறிதேயானாலும், இழியசெயலைப் புரிந்தாரா யின் குன்றிவிடுவர் என்று கூறுகிறது. மலைக்குன்றினையும், குன்றிமணியினையும் கூறும் இக் குறட்பா நன்கு அமைந் துள்ளது. - மானத்தை விட்டுத் தன்னை அவமதிப்பார் பின்னே ஒருவன்,செல்லுவது மிகவும் இழிவான செயலாகும், ஆவலுக்.