பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 குத் தேவலோகம் என்று சொல்லப்படுகிறதே அதுவும் கிடைக்காது. - அ ப் ப டி ய ா ன ல் ஏன் அவ்வாறு தன்னை இழிவாகப் பேசுபவர் பி ன் ேன செல்லுகின்றான் என்று ஆறாம் குறட்பா கேள்வி கேட்டு அறிவுரை கூறு கின்றது. தன்னை இகழ்பவர் பின்னே சென்று ஒருவன் வாழ்வதை விட இறந்தான்" என்று கூறுவதே மேலான தாகும் என்று ஏழாம் பாடல் விளக்கம் செய்கிறது. இந்த ஏழாம் குறட்பாவுடன், கூடாநட்பில்' கூறப்படும் ஆறாம் குறட்பா ஒருவகையில் சிந்திக்கத் தக்கதாக அமைந் துள்ளது. ஊனை வளர்க்கும் வாழ்க்கை" என்று, மானம் விட்டு வாழ்பவர்களை எட்டாம் பாடல் குறித்துக் காட்டு கிறது. 'கவரிமான் சிறப்புற எடுத்துக் காட்டுப்பட்டு, மான முள்ளவரின் செயலினை ஒன்பதாம் பாடல் விளக்குகின்றது. 'ஒளிதொழுது ஏத்தும் உலகு என்று கூறும் பத்தாம் பாடல் உயிர்நீத்த மானம் உடையவர்களின் பெருஞ் சிறப்பினைச் சுட்டிக் காட்டுகிறது. 98. பெருமை செயற்கு அரிய செய்து பெருமை கொள்ளுவதாகும் இத்துடன், செருக்கு இன்மை, பிறர் குற்றம் கூறாமை முதலியனவும் அடங்கும். நற்குணங்கள் நிறைந்த பெரியார் களது தன்மை எனப்படும் இப்பண்புகள் கொண்டவர்கள் மேன்மேல் உயர்ந்தே செல்லுவார்கள், முதற் குறட்பா பெருமையின் சிறப்பினைக் கூறுகின்றது. இரண்டு மூன்று ஆகிய பாடல்கள், பெருமை என்பது குடிமை மாத்திரத்தால் மட்டும் அல்லது செல்வம் உடைமையால் மாத்திரம் அது உண்டாகிவிடாது. என்று கூறுகிறது.