பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 அச்சிறப்பு சிறியவர்களிடத்தில் இருந்து விட்டால் அவர்கள் செருக்கு மிகுந்து செயல்படுவார்கள் என்பது ஏழாம் பாடலின் கருத்தாகும். பத்தாம் பாடல் உயர்ந்த தன்மையினை உணர்த்தி விடுகின்றது. பெருமையுடையவர்கள் பிறருடைய உயர்ச்சி யினையே பேசுவார்கள். குற்றங்களை மறைப்பார்கள். சிறியவர்கள் பிறருடைய குறையினையே பேசுவார்கள். அவர்களின் உயர்ச்சியினை மறைப்பார்கள். உயர்ந்த நிலை அல்லது பதவிகளில் இருந்தாலும், செல்வப் பெருக்கில் இருந் தாலும், அரிய செயல்களைச் செய்யாத சிறியவர்கள் மேலான வர்கள் ஆகிவிடமாட்டார்கள். வறுமையிலிருந்தாலும் அல்லது உயர்ந்த பதவி முதலிடத்தில் இல்லாவிட்டாலும் செயற்கரிய செய்பவர்கள் பெரியவர்களேயாவார்கள். ஒப்புரவு, ஈகை முதலியன செய்வதே அரிய செயல்கள் என்று கூறப்பட்டனவாகும், "நீத்தாரி பெருமை' என்ற அதிகாரத்தில், செயற்கரிய என்று கூறப்பட்ட செயல்கள் தவ ஆற்றல் மிக்கவர்களுடைய செயல்களாகும். 99. சான்றாண்மை அதாவது பல நல்ல குணங்களாலும் நிறையப் பெற்று அதனை ஆளும் தன்மையாகும். பல குணங்களாலும் நிறையப் பெற்றதென்பது "சாலும் 'சால்பு' என்பதால் அறியப்படுவதாகும். பெருமை" என்ற அதிகாரத்தில் பற்பல நற்குணங்கள் எடுத்துக் காட்டப்பட்டன வென்றா லும், அவைகளும் மற்றுமுள்ள அரிய குணங்களும் நிறைந் திருக்கின்ற தன்மையினை இந்த அதிகாரம் கூறும். முதல் இரண்டு பாடல்களும், சால்பிற்கு ஏற்ற குணங்கள் யாவை என்பதைப் பொதுவகையால் கூறுகின்றன. மூன்று முதல் ஏழு பாடல்கள் வரை, சால்பின் தன்மையினை சிறப்பு