பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 இதனை முதல் குறட்பா நன்கு தெளிவுபடுத்து ஒறது. பொருள் செயல் வகை" என்ற அதிகாரத்தின் கருத்துகளையும் ஒப்பிட்டுப் பார்த்தல் நல்லதாகும். எல்லாம் பணத்தினாலேதான் பொருளாலேதான் கூடும்" என்று சொல்லிக் கொண்டே செய்யவேண்டியவைகளையும் செய்யாமல் இருப்பவனை மாணாப் பிறப்பு" என்று இரண்டாம் குறட்பா கூறுகிறது. உலக வழக்கில் பேய்ப்பிறப்பு என்றும் கூறலாம். ஈகை என்பதே அறியாத இப்படிப்பட்டவணை, இரண்டாம் குறட்பா மருளான்' என்றும் சுட்டிக்காட்டிற்று. செல்வத் தினை மட்டும் மற்றவர்களைவிட அதிகமாக சேர்ப்போம் என்று எண்ணி அதனையே மிகமிக அதிகமாகச் சேர்த்து, அதன் பயனான புகழினை விரும்பாத ஆடவர்கள் உலகில் வாழ்வது இப்பூமிக்குப் பாரமேயாகும் என்பதனை நன்கு மூன்றாம் குறட்பா உணர்த்துகின்றது. 'ஈதல் இசைபட வாழ்தல்" என்று பிற அதிகாரத்தில் வரும் குறட்பாவினையும் பிறவற்றையும் சிந்தித்தறிதல் வேண்டும். ஒரு பொருளும் ஈகை செய்து அறியாதவன் யாராலும் விரும்பும் தன்மையில்லாதவனே ஆவான். அப்படிப்பட்டவன், தான் இறந்த பிறகு எச்சமாக நிற்பது எது என்று எண்ணமாட்டானோ என்ற குறிப்பினை நான்காம் பாடல் விளக்குகின்றது. கோடி உண்டாயினும் இல்' என்று கூறும் ஐந்தாம் பாடலும், ஏதம் பெருஞ் செல்வம்" என்று கூறும் ஆறாம் பாடலும் அப்படிப்பட்டவனிடத்தில் இருக்கின்ற செல்வத் தின் தன்மையினை எடுத்துக் கூறுகின்றனவாகும். கொடுமை யான செயலினைச் செய்பவன் என்று ஏழாம் பாடல் அரிய கருத்தினை எடுத்துக்காட்டி விளக்கம் தருகிறது. "தமியள் மூத்தற்று' என்று குறிப்பிடுவது பன்முறையும் கிந்திக்கத்தக்கதாகும். மிகு நலம் பெற்றாள்' என்று செல்வத்