பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 ஆணரி' என்று கூறினார். அதுவே அடிப்படையானதாகும். மூன்றாம் குறட்பா, உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்." என்றும், மற்றையோர், தொழுதுண்டு பின் செல்பவர்" எனவும் கூறி உழவர்களின் பெருஞ் சிறப்பினை விளக்கிக் காட்டுகிறது. நான்காம் குறட்பா உழவர்களை, "அலகு உடைய நீழலவர் என்று குறிப்பிடுகிறது. பல குடை நீழலும் தங்குடைக் கீழ்காண்பர் என்றும் கூறுகிறது. அனை வரிக்குமே . அனைவரையுமே, காப்பாற்றுவது உழவுத் தொழில் என்பதும் அதனைச் செய்வோரையும் சிறப்பித்துக் கூறியது. தம் கையால் உழுது உண்ணும் இயல்பினை உடைய உழவர்களை, ஐ ந் தாம் குறட்பா, ‘கைசெய்துண் மாலையவர்" என்று குறிப்பிடுகிறது. அவர்கள் பிறரிடம் சென்று யாசிக்கமாட்டார்கள் என்றும், யாசிப்பவர்களுக்கு மறைக்காமல் கொடுப்பார்கள் என்றும் பெருமையாக ஐந்தாம் குறட்பா குறிக்கிறது. ஆறாம் குறட்பா, உழவர்கள் தமது தொழிலைச் செய்யாவிட்டால், யாவரும் விரும்பும் உணவும் இல்லை. துறந்தோம் என்பவர் அந்த அறத்தின் கண் நிற்றலும் முடியாது என்று எடுத்துரைக்கின்றது. நிலத்தினை உழுகின்ற முறையின் பொதுத் தன்மை யினை ஏழாம் பாடல் குறித்துக் காட்டுகிறது. இப்பாடலில், தொடிப் புழுதி கஃசா உணக்கின்' என்று கூறப்பட்டிருப்பது இன்றியமையாததாகும். உழவர்கள் அறிய வேண்டிய ஐந்து உண்மைகளை எட்டாம் பாடல் உணர்த்துகின்றது. இந்த ஐந்தும் மிகவும் சிறப்பான செயல்களாகும். செல்லான் கிழவன் இருப்பின்" என்று தொடங்குகின்ற ஒன்பதாம் பாடல், உழவன் தன்னுடைய நிலத்தினைத் தானே நேரில் சென்று பார்க்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நிலம் கெட்டுவிடும் என்றும் விளக்குகின்றது.