பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 நிலத்தினை மனைவிக்கு ஒப்பிட்டுக் கூறுவது பன்முறை யும் சிந்திக்கத்தக்கதாகும். உழவனைக் கணவன் என்று கூறினார். பத்தாம் பாடல், நிலம் என்னும் நல்லாள் நகும்" என்று குறட்பா முடிகிறது. உழவுத் தொழில் இருக்கும் போது வறுமையென்பதே இருப்பதற்கு இடமில்லை என்ற இக் குறட்பா, குறிப்பாக உணர்த்தி உண்மையினை உணர வைக்கிறது. 105. நல்குரவு வறுமை என்பதனைக் குறிப்பதாகும். நுகரப்படுவன எதுவுமே இல்லாமையாகும். முதல் ஐந்து பாடல்களும் நல்குரவு என்பதன் கொடுமையினை உணர்த்துகின்றன. ஆறுமுதல் ஒன்பது பாடல் வரை நல்கூர்ந்தார்க்கு- வறுமை யாளருக்கு உண்டான குற்றங்கள் கூறப்படுகின்றன. அவ்வறுமை உளதாய வழி செய்வது இன்னதென்பதனைக் கூறுவது பத்தாம் குறட்பாவாகும். இன்மையே இன்னாதது" என்று முதற் குறட்பா எடுத்துக் காட்டி, நல்குரவின் கொடுமையினைச் சுட்டிக் காட்டிற்று. இரண்டாம் பாடல், இன்மை என ஒருபாவி' என்று நல்குரவினைக் குறிக்கின்றது, இம்மை மறுமையாகிய இன்பம் எதுவுமே இல்லையாக அத்துன்பம் வரும் என்ப தாகும். இன்மை என ஒருபாவி’ என்பது, 'அழுக்காறு என ஒருபாவி’ என்பது போல் கூறப்பட்டது. நல்குரவு என்பது தொல் வரவும் தோலும் கெடுக்கும்" என்று மூன்றாம் குறட்பா கூறுகின்றது. பழங்குடிக்குண்டான பெருமையினையும் கெடுக்கும் . சொல்லின் தன்மையினை யும் கெடுக்கும். இரண்டினையும் ஒருங்கே கெடுக்கும் என்பதாகும். நற்குடியில் பிறந்தோர்க்கும், நல்குரவு" வந்துவிட்டால் இழிவான சொற்களுக்கு இடமாக்கிவிடும்.