பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 முதலிரண்டு பாக்களும், நல்குரவால் உயிர் நீங்கும் எல்லைக்கண் இழிவல்லாத இரவு-யாசித்தல்.விலக்கப்படாது என்பதனைக் கூறுகின்றன. மூன்று முதல் ஏழு பாடல் வரை இரத்தலுக்குத் தக்கவரிடம் சென்று இரத்தல் வேண்டும் என்பதனைக் கூறுகின்றன. எட்டு, ஒன்பதாம் பாடல்கள் உலகிற்கு இரப்பார் வேண்டும் என்பதனைக் குறிக்கிறது, இரப்பவர்களுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாததோர் இயல்பினைப் பத்தாம்பாடல் குறிக்கின்றது. - இரத்தல் என்பது இன்பமாக முடியும்; எப்போது என்றால், யாசித்த பொருள்கள் துன்பம் இல்லாமல் கிடைத் தால் என்பதாகும். மறைத்தல் என்பதனை அறியாதவர்கள் முன்னே நின்று யாசிப்பதும் ஒர் அழகாகும் என்று மூன்றாம் குறட்பா உரைக்கின்றது. கனவிலும் தேற்றாதார் மாட்டு' என்று குறிக்கின்ற நான்காம் பாடல் அரிய உண்மையினை உணர்த்தி விடுகின்றது. மறைக்காமல் கொடுப்பவர்களின் சிறப்பினை ஐந்தாம் பாடல் காட்டுகிறது. வையகத்தின் உண்மை யான்" என்பது இதனை உணர்த்துகின்றது. உள்ளதை மறைக்காத வர்களை கரப்பு இடும்பை இல்லாரைக்காணின் ' என்று ஆறாம் குறட்பா, வறுமையாளர் தீமை நீங்கும் வழியினைக் கூறுகிறது. இகழாமல் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவர் மனம் மகிழும். இதனை, மகிழ்ந்துள்ளம்" என்று ஏழாம் பாடல் விளக்குகின்றது. இரப்பவர்கள் யாசிப்பவர்கள் . இல்லையென்றால் உலக வாழ்க்கை, மரப்பாவை இயங்கியது போலாகும் என்று எட்டாம் பாடல் உணர்த்துகின்றது. கொடுப்பார்க்குப் புகழ் உண்டாவதே இரப்பவர்களால்தான் என்று கூறுகின்ற ஒன்பதாம் குறட்பா, 'ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம்: என்று அமைந்துள்ளது. இரப்பவன்.யாசிப்பவன் என்றும்ே கோபம் கொள்ளக் கூடாது என்று பத்தாம் குறட்பா