பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 காட்டுகிறது. நான்காம் குறட்பா, அவர்கள் மேம்பட்டுக் காட்டிக்கொள்ளும் தன்மையினை உரைக்கின்றது. ஐந்தாம் குறட்பா, அவர்கள் ஆசாரம் என்பதை அறியமாட்டார்கள் என்கிறது. அப்படி ஆசாரம் செய்தாலும் அதுவும் கீழான எண்ணத் தினாலேயேயாகும் என்று எடுத்துக் காட்டுகிறது. அவர்கள் பறை போல அடித்துக் கொண்டிருப்பவர்-பேசுபவர் என்று ஆறாம் குறட்பா சொல்லுகிறது. கயவர்கள் மெலிந்தவர்களுக்கு யாதும் கொடார்: நலிய அடிப்பவர் களுக்கே கொடுப்பார்கள் என்று ஏழாம் குறட்பா காட்டு கிறது. எட்டாம் குறட்பாவும் கசக்கிப் பிழிபவர்களுக்கே கயவர்கன் பயன் படுவார்கள் என்று உணர்த்துகிறது. பிறர் நன்றாக உணவும் உடுத்தியும் இருந்தால் அவர்மீது பொய்யாகப் பேசி குற்றம் காட்டும் இயல்பினர் என்று ஒன்பதாம் பாடல் உணர்த்துகிறது. பத்தாம் பாடல் மானத்திற்கு அஞ்சமாட்டார்கள் என்றும் யாதேனும் துன்பம் வந்தால் அந்தக் காரணத்தை வைத்தே தம்மை விற்றுக் கொள்ளவும் தயங்கமாட்டார்கள் என்றும் விளக்கம் தருகின்றது. இக்குறட்பாவில் விரைந்து' என்று கூறி இருப்பது ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாகும். கயவர்களைப் போல-அவருக்கு ஒப்பாக எங்குமே காணமுடியாதென்று முதற்குறட்பா குறிக்கின்றது. ஒப்பாரி யாம் கண்டதில் என்று குறட்பா அமைந்துள்ளது. மக்களே போல்வர் கயவர்-நெஞ்சத்து அவலம் இலர் தேவர் அனையர் கயவர்-செம்மாக்கும் கீழ்-கீழ்களது ஆசாரம்-அறைபறை அன்னசயவர்-ஈர்ங்கை விதிரார் கொல்லப் பயன் படும்.கீழ் வடுக்கானவற்றாகும் கீழ்-விற்றற்கு உரியர் விரைந்து என்று குறித்துக் காட்டியவைகள் எல்லாம் கயவர்களின், இழி தன்மை யினையும் கூறுகின்றனவாகும். . :- .