பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 எதைப்பற்றியும் கவலையே கொள்ளாதவர்கள் என்று இரண்டாம் பாடல் கூறுகிறது. தேவர்களைப் போல் விரும்பியவற்றையெல்லாம் செய்பவர்கள் கயவர்களாவார் கள். தேவர்கள் என்று சொல்லப்படுவர்களின் மனோ நிலை கூறப்பட்டதுமல்லாமல், தேவருலகத்தின் தன்மையும் விளக்கிக் காட்டப்பட்டது. பட்டித்தனமாகப் பேசும் இயல்பினரே கயவர்கள் என்று நான்காம் பாடல் குறிக்கின்றது. ஏதேனும் ஊதியம் கிடைக்கும் என்றால் கயவர்கள் ஆசாரமாகக் காட்டு வார்கள் என்று ஐந்தாம் பாடல் உணர்த்துகிறது. ஆறாம் பாடல் கயவரை அறைபறை" என்று குறிப் பிட்டு சிந்திக்க வைக்கிறது. ஈரங்கையினைக் கூட-நாம் உணவு உண்ட கையினைக்கூட தெரிக்கமாட்டார்கள் என்று கூறி எப்படிப்பட்டவர்களுக்குக் கொடுப்பார்கள் என்றும் ஏழாம் குறட்பா அறிவுறுத்துகிறது. - 'கயமை' என்ற இந்த அதிகாரத்தோடு பொருட்பாலில் -ஒழிபியல் என்ற பகுதி முடிவடைகிறது. 109. தகை அணங்குஉறுத்தல் தனியளாய் நின்ற மாதினைப் பார்த்த ஆடவன் அவளுடைய அழகு தன்னை வருத்துவதைப் பற்றிக் கூறு கின்றான். முதற் குறட்பா தலைமகனுக்கு உண்டான ஐயப்பாட்டினைக் கூறுகின்றது. அவள் தோற்றம் அப்படி இருந்த தென்பதாகும். இரண்டாம் பாடல், அப்பெண் அவனை நோக்கிய இன்பத்தினால் தனக்குண்டானவருத்தத்தினைத் தலைமகன் சொல்லுவதைக் குறிக்கின்றது. மூன்றாம் பாடல், அப் அ. வி.-12