பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 என்பதாகும். நான்காம் பாடல்)அப்பெண்ணிடம் அவன் கண்ட புது மாதிரியான தீயினைக்கண்டான் என்று குறிப்பிடுகிறது. தியாண்டுப் பெற்றான்' என்று அவன் கூறுவது, அவனுடைய மனோநிலையினைப் புரிந்து கொள்ளச் செய்கின்றது. தோள்களின் சிறப்பினை அவன் கூறுகின்ற போது, வேட்ட பொழுதின் அவை அவை போலுமே" என்று குறிப்பிடுகின்றான் என்பதனை ஐந்தாம்பாடல் காட்டு கிறது. விரும்பிய அனைத்தும் அவன் பெற்று விடுவதாகக் கூறுகின்றான். ஆறாம் பாடலும் தோள்களின் சிறப்பினை, அமிழ்தம்: என்று கூறுகின்றது. இல்லறத்திலிருந்து பகுத்துண்டு வாழும் வாழ்க்கையினைப் போலவே இக்காதல் வாழ்க்கை யும் அவனுக்கு இருக்கின்றதென்பதனை ஏழாம் பாடல் தெளிவு படுத்துகிறது.

தம் இல் இருந்து" என்று தொடங்கும் இப் பாடல் சிந்தனைக் குரியதாகும். ஒன்பதாம் பாடலும் நுகர்ந்த இன்பத்தினையே விளக்கம் செய்கிறது. வளியிடை போழப் படாமுயக்கு என்று கூறி இருப்பது சிந்தனைக்குரியதாகும்.

மறைந்தொழுகும் காதலர்களின் இயல்பினையும் மனோ, நிலையினையும், கூடியார் பெற்ற பயன்' என்று குறிப்பிட்டு ஒன்பதாம் பாடல் கூறுகின்றது. 'அறிதோறும் அறியாமை' என்று பத்தாம் பாடல் குறிப்பிட்டு ஆழ்ந்த பொருளினை விளக்கிக் காட்டுகின்றது, - - 11 2. நலம் புனைந்து உரைத்தல் தலைமகன் தலைமகளுடைய அழகினைப் புனைந்து கூறுதலாகும். அதாவது கற்பனையில் பேசுதல் என்பதாகும். முதற்பாடல், இன்பம் நுகர்ந்த பிறகு தன்னுடைய காதலி அனிச்சப்பூவினை விட மென்மையானவள் என்று அவன்.