பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 கூறுவதை ஒன்பதாம் பாடல் விளக்கம் செய்கின்றது. அனிச்சமலரும், அன்னப்பறவையின் சிறகும் அப்பெண்ணின் பாதங்களுக்கு நெருஞ்சிப்பழம் போல் வருத்தத்தினைக் கொடுக்கும் என்று பத்தாம் பாடலில் கூறுகின்றான். அனிச்சம், பற்பல மலர்கள், மூங்கில், தளிர்நிறம், முத்து, நறுமணம், குவளைமலர், அனிச்சமலர் காம்பு, மதி, விண் மீன், மதியில் உள்ள மறு, அன்னப்பறவையின் சிறகு-ஆகிய இவையனைத்தையும் பிறவற்றையும் கொண்டு தலைவன் தனது காதலியின் அழகினைச் சிறப்பித்துக் கூறும் சிறந்த தன்மைகள் சிந்திக்கத் தக்கதாகும். 113. காதற் சிறப்பு உரைத்தல் தலைமகனும் தலைமகளும் தங்கள் தங்கள் காதல் மிகுதியினைக் கூறுதலாகும். பாலொடுதேன் கலந்தற்றே" என்று தொடங்கும் முதற் பாடல் தலைவன் இன்னதென்று அறியமுடியாத சுவையினைக் கூறுகின்றான் என்று குறிப்பிடு கிறது. பணி மொழி என்று சொல்லினைக் கூறிய குறிப்பு உணரத்தக்கதாகும். மொழி பிறக்கும் இடத்தின் சுவை யினைக் கூறுகின்றான் என்பது உய்த்துணரவேண்டிய தாகும். 'உடம்பும் உயிரும் போல் இருவரும் வாழ்கின் றோம் என்று குறிப்பிடுவதை இரண்டாம் பாடல் குறிக் கின்றது. பிரிந்து தனித்தனியாக இயங்க முடியாதவைகள் என்று குறிப்பிட்ட தனிக் குறிப்பு மிகவும் சிந்திக்கத் தக்க தாகும். மூன்றாம் பாடல், தலைவன் தன்னுடைய தலைவி கண்களிலேயே இருக்கத்தக்கவள் என்று கூறுவதைத் தெளிவுபடுத்துகிறது. ஆதலால் அவன், கண்களில் இடம் வேண்டும் என்பதற் காக அங்கிருக்கும் கருமணிகளைப் போகச் சொல்லு கின்றான். நீ போதாய்' என்று தலைவன் கூறும் சொற்கள் நயம்படி_அமைந்துள்ளன,