பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 நான்காம் பாடல், அவன் பிரிந்திருத்தல் என்பது இறந்து விடுவதுபோல் உள்ளது என்ற அவன் கூற்றினைக் குறித்துக் காட்டுகிறது. தனது காதலியை மறப்பதும் இல்லை. அதனால் நினைக்க வேண்டியதுமில்லை என்று கூறுவதை, ‘மறப்பறியேன்" என்று அமைந்த ஐந்தாம் பாடல் எடுத்துக் காட்டுகிறது. இப்பாடல் கண்ணாள் குணம்’ என்று முடிந் திருப்பது தலைமகனின் உள்ளப்பாங்கினைச் சுட்டுவதாகும். காதலி, தனது காதலரை நுண்ணியர்' என்று கூறு கின்றாள். இதனை ஆறாம் பாடல் கூறுகின்றது, நுண்ணியரி என்பதற்கு அருமையான காரணங்களைக் காட்டுகிறாள். ஏழாம் பாடல் அவள் கண்ணுக்கு மை எழுதாத காரணத்தைக் கூறுகிறது. எழுதேம்' என்று குறட்பா குறித்துக் காட்டுவதாகும். எட்டாம் பாடல், அவள் உணவினை சூடாக உண்ணா மல் இருக்கும் காரணத்தைக் கூறுவதாகும். வேபாக்கு அறிந்து" என்று குறிப்பிட்ட கருத்து பன்முறையும் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். அவள் கண்களை இமைக்காமல் இருப்பதற்குக் காரணத்தினைக் கூறுகின்றாள். இதனை ஒன்பதாம் பாடல் விளக்குகின்றது. ஊரார் தவறாகப் பேசுவதையும் அவள் எடுத்துக் கூறுகின்றான். பத்தாம் பாடல், தலைவி, தனது தலைவன் எப்போதும் இருக்கக் கூடிய இடம் எதுவென்பதை உவந்து உறைவd' என்பதால் கூறுவதை உணர்த்துகிறது. 114. நானுத்துறவு உரைத்தல் தலைமகளைக் காண முடியாமல் புறத்திலேயே இருக்கும்படியான நிலைமை ஏற்பட்டு விட்டதால் தலை மகன் தனது நாணுடைமையும் நீங்கி விட்டதென்பதைக் கூறும் பகுதியாகும். தனது துன்பத்தினை நாணமின்றி.