பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 பலரும் அறியும்படிசி செய்கின்ற நிலைமை அவனுக்கு உண்டாகி விட்டதென்பதாகும். தலைவியைப் பிரிந்திருப்பதால் வருந்துகிறவர்களுக்கு மடல்' அல்லாமல் வேறு பாதுகாப்பு இல்லை யென்று கூறுவதை முதற் குறட்பா எடுத்துக் காட்டுகிறது. மடல்’ பிற இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. ‘ஏமம் மடல் அல்லது இல்லை என்று குறட்பா அமைத்துக் காட்டுவதாகும். இரண்டாம் குறட்பா, நாணம் புறத்தே செல்லும் நிலை உண்டாகி விட்டதென்பதைக் குறிக்கின்றது. நோனா உடம்பும் உயிரும் என்று தொடங்குகின்ற இக்குறட்பா அவன் உயிரும் உடம்பும் எத்தகைய நிலைக்கு வந்துவிட்டன வென்பதை உணர்த்துகின்றது. மூன்றாம் பாடல், முன்பு அவனிடம் இருந்தவை யாவை என்பதனையும் இப்போது இருப்பவை யாவை என்பதையும் தெளிவுபடுத்துகின்றது. “பண்டு உடையேன், இன்று உடையேன்" என் பவை அவனுடைய சொற்களாக அமைந்துள்ளன. காமுற்றார் ஏறும் மடல்’ என்று மூன்றாம் குறட்பா எடுத்துரைக்கின்றது. பனை ஒலையினால் குதிரை போல் அமைத்து அதன்மீது காதலியை விட்டுப் பிரிக்கப்பட்டிருக்கும் காதலன் தனது வருத்தத்தினைப் பலரும் அறியச் செய்வதை மடன்மா ஏறல் மடல் ஊரிதல்" என்று கூறப்படும். 1 15. அலர் அறிவுறுத்தல் களவொழுக்கத்தில் வாழும் காதலர்களைப்பற்றி ஊரார் அறிந்து கொள்ளும் நிலைமை உண்டாகிவிட்டது. பலர் பலவாறாகத் துாற்றிப் பேசுகின்றனர். தூற்றிப் பேசுவது 'அலர்' என்று குறிப்பிடப்பட்டது, இப்படித் துாற்றிப் பேசுகிற பேச்சு காதலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது,