பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 தலைமகன் தோழிக்கு அறிவுறுத்தலும், தோழியும் காதலி யும் காதலனுக்கு அறிவுறுத்தலுமாகும். இந்த நேரத்தில் பிறர் அறியாமல் காதலர் வெளியூருக் குச் சென்றுவிடுவதுமுண்டு. இதனை உடன்போக்கு என்றும் கூறுவர். இதற்குப்பின் நடைபெறுவது திருமணமாகும். ஆதலால் இவ்வதிகாரத்திற்கு அடுத்து வருவது கற்பியல் என்பதாகும். இல்லறம் நடத்தும்போது நடைபெறுவ தாகும். 'அலர் உண்டானதால் தன்னுடைய உயிரே நிற் கின்றது என்று கூறுகின்ற காதலன் பேச்சு முதற் குறட்பா விலேயே காணப்படுகின்றது. தானும் அவளும் காதலர் களாக இருப்பதை ஊரார் அறிந்து கொண்ட செய்தி அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்து விட்டது. இந்த உண்மையை பலர் அறியார் என்றும் கூறுகின்றான். 'அலர் இல்லாவிட்டால் இவர்களின் தொடர்பு பிறர் அறியாமல் போய்விடும். தெரிந்ததால் தான் மணந்து கொள்வது உறுதியாகிவிட்டது என்று எண்ணுகிறான். தன் னுடைய காதலியின் அருமை தெரியாமல் மனம் போன போக்கில் தூற்றிப் பேசுகிறார்களே என்று வருந்துகின்றான். இதனை இரண்டாம் குறட்பா உரைக்கின்றது. 'அலர் எமக்குஈந்தது இவ்வூர்' என்று கூறுகின்றான். பிரிந்திருக்கும் காதலனுக்கு ஊரார் அலர் தூற்றிப் பேசுவதைக் கேட்கும்போது காதலியைக் கூடி மகிழ்ந்தது போலவே இருக்கின்றது என்று கூறுவதை மூன்றாம் பாடல் தெளிவுபடுத்துகிறது. பெற்றன்ன நீர்த்து' என்று குறட்பா விளக்கம் செய்கின்றது. காமம் என்பது அலரினால் கவ்வையினால் மலர்வதாகின்றது என்று நான்காம் பாடல் காட்டுகிறது. . சவ்வை அவர் இல்லையென்றால் காமம்கூட தனது தன்மை இழந்து போய்விடும் என்று அவன் கருத்தாகும்,