பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல் 116. பிரிவு ஆற்றாமை இல் வாழ்க்கையில் நாயகனும் நாயகியுமாக வாழ்ந்து வருகின்றார்கள். அறம், பொருள், இன்பங்களின் பொருட்டு நாயகியை விட்டு நாயகன் பிரிந்து செல்ல வேண்டியவனா கின்றான். கற்புள்ளம் செறிந்த இன்ப நாயகி பிரிவினைத் தாங்க முடியாதவளாகின்றாள். பிரிந்து சென்று விரைவில் திரும்பி வந்து விடுவேன் என்றுகூறிய நாயகனுக்கு நாயகி;எடுத்துரைப்பதை முதற் குறட்பா தெளிவாகப் புலப்படுத்துகின்றது. நாயகன் திரும்பி வரும்வரை நாயகி உயிருடன் இருப்பாள் என்று நினைப்பதற்கில்லை என்ற குறிப்பினைமுதற் குறட்பா விளக்கிக் காட்டுகிறது. செல்லாமை உண்டேல் எனக்குரை' என்று தொடங்குகின்ற குறட்பா சிந்தனைக்குரியது. இரண்டாம் குறட்பா நாயகன் பிரிந்து சென்றுவிடு வான் என்ற குறிப்பினைத் தலைவி தெரிந்து கொண்டாள் என்பதனைக் காட்டுகிறது. பிரிவஞ்சம் புன்கண் உடைத் தால்" என்று குறட்பாவில் காணப்படுவது இவ்வுண் மையினை புலப்படுத்துவதாகும். பிரியமாட்டேன் என்றவர் பிரிந்து செல்லும் அளவுக்கு வந்து விட்டாரே என்று தலைவி. சொல்வதை மூன்றாம் குறட்பா எடுத்துக்காட்டுகிறது.