பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'? 'கடவுள்' என்று இங்குக் கூறப்பட்டதால் முதல் அதிகாரத்தில் காணப்படும் இறைவன்' என்ற சொல்லுக் கும் அரசியல் பகுதிகளில் காணப்படும் இறைவன்' என்ற சொல்லுக்குமுள்ள வேறுபாடு விளங்குவதாயிற்று. 2. வான்சிறப்பு மழையின் பெருமையினைக் கூறுவதாகும். மழை என்பது நீரைமட்டும் குறித்து நிற்பதன்று. அது ஒரு செயலினை-நிகழ்ச்சியினை, உணர்த்துவதாகும். மழை பெய்தல் என்பது வழக்கு, முழுமுதற் பொருளான இறைவனைக் கூறிய பிறகு இந்த உலகத்தின், ஒருமித்த செயலொன்றினைக் கூறுகின்றார். இவ்வுலகம், நிலம், நீர், தீ, காற்று, விண் என்ற ஐந்து இயற்கைப் பிரிவுகளை உடையது. இந்த அதிகாரம் நீரின் சிறப்பு என்று கூறப்படவில்லை. நீர்-தண்ணீர் இன்றியமை யாத தென்றால் காற்றும் அ வ் வா றே கொள்ளப் படுதல் வேண்டும் என்பாரையும் மறுத்தல் கூடாது. இந்த ஐந்தினையும் ஐம்பூதங்கள் என்று கூறுவர். ஒவ்வொருவர் உடம்பிலும் இந்த ஐந்தும் இருக்கின்றன. உலகிலுள்ள இந்த ஐந்து பூதங்களும் ஒன்று சேர்ந்து நடை பெறுகின்ற நிகழ்ச்சி மழை ஒன்றுதானாகும். х இறைவன் ஆணைாயல் நிகழும் செயல் என்றும் கூறப்படும். நிலத்தைச் சார்ந்தே நீர் நிற்க, தீ அதனை ஆவியாக்க, மேலே காற்று கொண்டு செல்ல, வான் துணையாக இருக்க மழை பெய்கின்றது. சிந்தனைக்குரிய தாயும். ஐம்பூதங்களும் சேர்ந்து நடந்த செயலாகும். முதல் ஏழு பாக்களும் உலகம் நடைபெறுவதற்குக் காரணமாகவுள்ளது மழையேயென்று கூறுகின்றன. கடைசி மூன்று பாக்களும் அறம், பொருள், இன்பம் என இவை நடைபெறுவதற்கும் மழையே அடிப்படைக் காரணம் என்று