பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 யோடு கூடி மாலைப் பொழுதிற்கு விருந்து வைப்பேன் என்று கூறுகின்றான். - பிரிந்து சென்ற கணவனை நினைத்து வருந்துகின்ற மகளிர்க்கு ஒருநாள் பல நாட்கள் போல இருக்கும் என்று ஒன்பதாம் பாடல் புலப்படுத்துகிறது. நெருநற்றுச் சென்றார்-என்ற குறட்பா ஒப்பிடத் தக்கது. நாயகி பிரிவுத்துயரால் உள்ளம் உடைந்து இறந்து விட்ட பிறகுதான் யாது செய்வேன் என்று கலக்கமுறுகின்ற நாயகன் கூறுவதைப் பத்தாம் பாடல் உணர்த்துகிறது. பெறின் என் . பெற்றக்கால் என் . உறின் என் என்பவைகள் அவன் மனவேதனையினை நன்கு விளக்கம் செய்து விடுகின்றன. 1 28. குறிப்பு அறிவுறுத்தல் தலைமகன், தலைமகள் ஆகிய இருவரும் ஒருவர் குறிப்பினை ஒருவர்க்கு அறிவுறுத்தலாகும். இது பிரிந்து போய் திரும்பி வந்த தலைமகன் கூடியபோது நிகழ்வதாகும். நாயகியே! நீ சொல்ல மறைத்தாலும், உள்ளத்தில் சொல்ல வேண்டுவதொன்றுண்டு" என்று நாயகன் குறிக்கின்றான். அவளுடைய கண்கள் மூலம் தெரிந்து கொண்டான். இதனை முதற்குறட்பா வலியுறுத்துகிறது. இரண்டாம் பாடல் அப்பெண்ணிடம் பெண்களுக்குரிய குணத்திலும் அதிகமாக இருக்கின்றதென்பதனைக் கூறுவ தாகும். பெண் நிறைந்த நீர்மை பெரிது’ என்று குறட்பா கூறுகின்றது. - அருமையான உவமையொன்றினை மூன்றாம் பாடல் சொல்லுகிறது. கோர்த்த மணிக்குள் நூல் தெரிகிறது. அவளுடைய அழகினுள் ஒரு குறிப்புத் தெரிகின்றது. திகழ்தருநூல்' என்பதும் திகழ்வதொன்றுண்டு என்பதும்