பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211 விளக்கம் தருவனவாகும். அதுவே போன்றதொரு அழகிய உவமை தான்காம் பாடலிலும் காணப்படுகிறது. இக் குறட்பாவில், முகைமொக்குள் நகைமொக்குள்’ என்பன சிந்திக்கத் தக்கனவாகும். . மூன்றாம் குறட்பா போலவே நான்காம் குறட்பாவும் “ஒன்று உண்டு" என்று முடிகிறது. இப்பெண்ணானவள் மறைத்து வைக்கின்ற குறிப்பு தனது வருத்தத்தினைத் தீர்க்கும் மருத்தினைக் கொண்டிருக் கிறது-என்று கூறுவதை நான்காம் குறட்பா புலப்படுத்து கிறது. நாயகன் தன்னிடம் அன்புடன் சேர்ந்து நுகரும் இன்ப மகிழ்ச்சி மீண்டும் அவன் பிரிவானோ என்ற அச்சத்தினைத் தருவதாக இருக்கின்றதென்று ஆறாம் பாடல் கூறுகிறது. ஏழாம் பாடல், துறைவன் தணந்தமை" 'உணர்ந்த வளை-என்பவற்றால், நாயகன் பிரியும் குறிப்பினைக் குறிப்பதாகும். - நாயகன் பிரிந்திருப்பதை பல நாட்கள் போல எண்ணுகிற உள்ளம் கொண்டு பசப்பு நிறமடைந்ததை எட்டாம் பாடல் எடுத்துக் காட்டுகிறது. - "எழு நாளேம் மேனி பசந்து என்று கூறுகின்றாள். பிரிவினையறிந்த நாயகி, தோள் வளைகளைப் பார்த்தாள், தோளைப் பார்த்தாள். பின் அடிகளைப் பார்த்தாள் என்று ஒன்பதாம் பாடல் உணர்த்துகிறது. உடம்புபிரிவால் மெலிந்துவிடும் என்றும் அது நிகழாமல் உடன் செல்லுமாறு அடிகளை நோக்கினாள் என்பதாம், கண்களினால் காமநோயினைத் தெரிவிக்கும் பெண்ணுக்கு பெண்மை என்னும் பண்பு மேலும் ஒரு பெண்மை பெற்றது. போல் இருக்கிறது என்பது பத்தாம் பாடல் கூறுவதாகும்.