பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31? நாயகன் தும்மினான். வாழ்க" என்று மரபு வழக்கத்தை யொட்டி சொல்லுவாள் என்று நினைத்தான். அவளோ, வேறு காதவி நினைக்கின்றாள். அதனால் தான் தும்மல் வந்தது என்று ஊடிக்கொண்டாள். இதனை இரண்டாம் பாடல் கூறுகிறது. - ஆண்கள் இன்பநேரத்தில் மாலை அணிவித்துக் கொள்வதும் உண்டு. பூ சூடியதைக் கண்டு, எந்தக் காதலிக்கு இதனைச் சூட்டுவதற்காக வேண்டி சூடினார்" என்று கூறி ஊடிக் கொண்டாள். ஒருத்தியைக் காட்டிய சூடினிர் என்று குறள் குறிக்கிற்து. உலகில் யாரையும் விட 'நாம் காதலில் சிறந்தவரா னோம்” என்று கூறினான். இது நான்காம் பாடலாகும். "யாரினும் யாரினும் என்று என்பதாக அவள் சொல்லி, பலருடன் காதல் கொண்ட அவன் ஒப்பிட்டுப் பேசு கின்றான் என்று ஊடிக் கொண்டாள். ஐந்தாம் பாடல், அவன் இப்பிறவியில் பிரியமாட்டோம் என்று கூறினான் என்பதைக் கூறுகிறது. அதைக் கேட்ட அவள், பிரியமாட்டோம் என்கிறீர்களே, பிரியலாம் என்று கூட நினைத்திருப்பீர்கள் போலிருக்கிறது" என்று கூறி ஊடிக் கொண்டாள். நினைத்துக் கொண்டே இருந்தேன் அப்போது மறந்தும் இருந்தீர்களோ' என்று கூறி ஊடிக்கொண்டாள். இது ஆறாம் பாடலாகும். ஏழாம் பாடல், வழுத்தினாள் - தும்மினேன் - அழித்து - அழுதாள் - என்று குறிப்பிட்டு அரிய நுணுக்கத்தினை உணர்த்தி வருகிறது. தும்மல் வந்த போது மறைத்தானாம். அப்போதும் ஊடிக்கொண்டாள் என்று எட்டாம் பாடல் காரணம் கூறி விளக்கம் தருகின்றது. - - வாடிக் கொள்ளுகின்ற நாயகியிடம் பணிவாகப் பேசிப் பார்த்தான். அப்போதும் கோபித்துக் கொண்டான்.