பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219 புத்தேள் நாடு உண்டோ" என்று கேட்பது மூன்றாம் பாடலாகும். நிலமும் நீரும், ஒன்றானது போல நாயகன் . நாயகி உள்ள ஒற்றுமை இருக்கின்றதென்று கூறுகின்றாள். புலத்தவின் இன்பத்திற்குப் புத்தேள் நாடு இணையில்லை என்று கூறிவிடுகின்றான். நான்காம் பாடல் அப்புலவி நீங்கும் தன்மையினையும் அதன் அளவினையும் கூறுவதாகும். ஊடுதலைச் செய்கின்ற தலைவியினிடம் ஊடல் நீங்கிய பிறகு உண்டாகும் கூடல் நிகழ்ச்சியில் இன்பம் சிறந்த இன்பம் என்று ஐந்தாம் குறட்பா கூறி, ஆங்கு ஒன்று உடைத்து' என்று முடிகிறது. ஆறாம் பாடல், உண்ணுகின்றபோது உண்டாகின்ற இன்பத்தினைவிட உண்டபொருள் சீரணிக்கின்றபோது உண்டாகும் இன்பமே தலைசிறந்ததென்று கூறுகிறது. இதனை வைத்தே, புணர்தலின் ஊடல் இனிது’ என்று விளக்கம் தருகிறது, - ஊடலில் தோற்றவர் வென்றாரென்றும், அது கூடலில் காணப்படும் என்கின்ற ஏழாம் குறட்பா ஆழ்ந்த சிந்தனைக் குரியதாகும். காதலியின் நெற்றி வியர்த்ததை எட்டாம் குறட்பா விளக்கம் செய்கிறது. ஊடலை மேன்மேலும் விரும்புகின்றான். 'நுதல் வெயர்ப்ப' என்பது சிந்தனைக் குரியதாகும்.

  • ஊடுக" - ஒளி இழை' - இரப்ப - நீடுக - இரா' என்ற அரிய முறையினால், நாயகன் இரவுப் பொழுது நீட்டித்துக் கொண்டே போக வேண்டுமென்று, நாயகியிடத்தில் அவன் ஊடலைத் தீர்க்க இரந்து கொண்டிருத்தலும் வேண்டும் என்றும் கூறுவதை ஒன்பதாம் பாடல் மிகத் தெளிவாக விளக்கம் செய்கிறது.

காமநுகர்ச்சிக்கு இன்பமாவது ஊடலேயாகும். அந்த ஊடலுக்கு இன்பமாவது யாதென்றால், நேரமறிந்து அதனை நீக்கிக் கூடுதலாகும் என்று உணர்த்துவது பத்தாம் குறட்பா வாகும்.