பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} {} ஒன்பதாம் பாடல் அறம் செய்பவர்களே இம்மை இன்பமும் பெற்றுப் புகழும் அடைவர் என்று உறுதியளிக் கிறது. பத்தாம் பாடல் செய்யத்தக்கதையும் ஒழியத் தக்கதையும் குறிப்பிடுகிறது. ஆக்கம் எவனோ, ஆக்கமும் இல்லை, செல்லும் வாய் எல்லாம், நான்கும் இழுக்கா இயன்றது, இது என வேண்டா, வழி அடைக்கும் கல், ஆகுல நீரபிற, பொன்றாத் துணை, புறத்த புகழும் இல, செயற்பாலது, உயற்பாலது -என்பவை நினைவில் நிறுத்தற்குரியன. தகையணங் குறுத்தல், அலரறிவுறுத்தல், குறிப்பறிவுறுத்தல் என்ற அதிகாரங்கள், உறுத்தல்' என்று முடிகின்றன. அறத்துப்பால்-இல்லற இயல் 5. இல்வாழ்க்கை மனைவியுடன் கூடி வாழ்கின்ற வாழ்க்கையின் சிறப்பு. அறம் செய்தற்குரிய இருவகை நிலையுள்-இல்லறம்,துறவறம் -முதலாவதாகும். வாழ வேண்டிய முறையில் அறவாழ்வை நடத்துவானேயானால் துறவறம் தேவையில்லை என்ப தனை இந்த அதிகாரம் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது. முதல் இரண்டு பாடல்களும், இல்வாழ்க்கை எல்லா ருக்கும் துணையாக இருப்பதாகும் என்பதனையும், மூன்று நான்கு ஐந்து ஆகிய மூன்று பாடல்களும் இல்லறத்தில் நின்றவள் எவ்வாறு அறம் செய்ய வேண்டும் என்பதனையும் ஆறுமுதல் ஒன்பது வரையுள்ள பாக்கள் துறவறத்தினை விட இல்லற நிலையே மேம்பட்டது என்பதனையும் கூறுகின்றன. பத்தாம் பாடல் இவ்வுலகில் வாழ்கின்ற முறையில் வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படுவான் என்பதைக் கூறுகின்றது.