பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 உண்மைகள் தலையானவைகளாக அமைந்துள்ளன. ஆற்றல் அரிது, மாணப் பெரிது, கடலின் பெரிது, பயன் தெரிவார், செயப்பட்டார் சால்பு, துப்பு ஆயர், துடைத்தவர் நட்பு, அன்றே மறப்பது, கொன்றன்ன இன்னா, உய்வில்லை, என்பன நினைவுக் கருவிகளாக அமைந்து கருத்துரைகளைக் கூற வல்லனவாகும். தான் செய்ய வேண்டிய இன்றியமையாக் கடமைகளை ஒருவன் செய்யாதிருப்பினும்-மக்கள் பிறவி யெடுத்தவன் செய்து முடிக்கவேண்டிய நன்றியினைச் செய்யாவிட்டாலும் தப்பிக்கலாம். ஆனால் பிறன் தனக்குச் செய்த நன்மை யினை மறப்பானேயானால் தப்பிக்கவே முடியாதென்ப தனைக் கூறும் கடைசிப் பாடல் சிந்தனைக்குரியதாகும். அறிதல்' என்று முடிகின்ற இவ்வதிகாரத்தினைப் போலவே, வலி அறிதல், காலமறிதல், இடனறிதல், குறிப் பறிதல், அவையறிதல், என்ற அதிகாரங்களும் முடிகின்றன. குறிப்பறிதல் என்பது இரண்டு அதிகாரங்களுக்குப் பெயராக அமைந்துள்ளது. பிறவிகள் அனைத்தும் ஏழில் அடங்கும். ஆதலால் ஏழு பிறவிகள் என்று கூறப்படும் எழுமையினையுடையது என்பதைக் குறிக்க எழுமை' என்று ஏழாவது குறட்பா கூறுகின்றது. வினைப்பயனால் பிறவிகள் உண்டாவதாகும். இக் குறட்பா, அன்பு பிறப்புத்தோறும் தொடர்ந்து வரும் என்று குறித்துக் காட்டிற்று. தினை, பனை என்பன அளவினைக் காட்டுவனவாகும். அவை அளவைகள். நான்காம் குறள் கூறுவது. தினை, பனை என்பன தினை அரிசி பனைமரம் என்பதல்ல. 12. நடுவு நிலைமை நண்பர், பகைவர் இரண்டுமல்லாதார் ஆகிய மூன்று வகையினரிடத்திலும் அறத்தின் வழுவாமல் நடந்து கொள்ளுவதைக் கூறுவதாகும். நன்றி செய்தவரிடத்தும்,