பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2() என்பதனை மட்டும் குறித்ததாகாது. எட்டாம் குறட்பா, துலாக் கோலினைக் காட்டிக் கருத்தினை அழகாக வற்புறுத்துகின்றது. தகுதி, செப்பம், ஆக்கம், தக்கார், எச்சம், கோடாமை, தாழ்வு, சீர்தூக்கும் கோல், உட் கோட்டம், வாணிகம் முதலியன கருத்துக்களை நினைவு படுத்த உதவுவனவாகும். பகுதியான் பாற்பட்டு ஒழுகல்-எச்சத்திற்கு ரமாப்புஅன்றே ஒழியவிடல்-அவரவர் எச்சத்தால்-நெஞ்சத்துக் கோடாமை - கெடுவல்யான் என்பது அறிக-கெடுவாக வையாது உலகம்-ஒருபால் கோடாமை-உட்கோட்டம் இன்மை-பிறவும் தமபோல் செயின்-என்ற தொடர்கள் நன்கு சிந்திக்கத்தக்கனவாகும். நிலைமை' என்று வேறு எந்த அதிகாரமும் முடியவில்லை. நிலையாமை" என்ற வொரு அதிகாரம் துறவறவியலில் கூறப்பட்டுள்ளது. 13. அடக்கம் உடைமை மெய், மொழி, மனம் ஆகியவை திய வழியில் செல்லாமல் அடங்குதல் என்பதைக் கூறுதலாகும். அடக்கம் மிகவும் சிறந்த பயனை அளிக்கும் என்பதனை முதற்குறட்பா குறிக் கின்றது. அடக்கம் உடைமை, அது இன்மை என்பதைக் காட்ட தேவருலகத்தில் சேர்ப்பிக்கும், துன்ப நரகத்தில் சேர்ப்பிக்கும் என்று கூறினார். துன்பமான இடத்தினை 'ஆர் இருள்' என்றார். இரண்டாம் குறட்பா, காப்பாற்றவேண்டியதென்பதனே யும், மூன்றாம் குறட்பா நல்லோரால் மதிக்கப்படச் செய்வது அடக்கம் என்பதனையும் கூறுகின்றன. மலையினைக் காட்டி அடக்கத்தின் பெருமையினை நான்காம் குறட்பா விளக்கு கிறது. - செல்வர்க்கு அடக்கம் இருக்காதென்பது உலகியல். பாகச் சொல்லப்படுவதால் அவர்களிடத்தில் காணப்படும்