பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24


வரையாள் - என்றெல்லாம் குறித்துப் பெண்ணைச் சிறப்பித்துக் கூறினார். முதல் ஆறு பாக்களும் பிறன் இல்: விழைவானின் குற்றத்தினையும் கடைசி நான்கு பாக்களும் பிறன் இல் விழையாதவனுடைய குணங்களையும் விளக்கம் செய்கின்றன. கொடிய குற்றங்கள் நான்கும் பிறன் இல் விழைபவனை விட்டு நீங்கவே நீங்காதென்று ஆறாம் குறட்பா குறிக்கின்றது. பிறனில்விழைபவன் இறந்தவர்க்குச் சமம் என்று மூன்றாம் குறட்பா கூறும்.

எட்டாம் குறட்பாவில் 'பேராண்மை’ என்று கூறிய சிறப்பு மிகுதியும் சிந்திக்கத்தக்கதாகும். புறத்தே காணப்படும் பகைகளை அடக்கும் ஆண்மையுடையார்க்கும் உட்பகையாகவுள்ள காமம் அடக்குவதற்கு அரிதானதாகையால், 'பேராண்மை' என்று கூறினார்.

கடலினை 'நாமநீர்' என்று ஒன்பதாம் குறட்பா கூறுகின்றது. அகலம், ஆழம், பொருளுடைமை அனைத்தும் பெற்று அளவிடப்படாததால் நாமநீர் என்று கூறப்பட்டது. 'நலத்திற்கு' என்பது 'நலக்கு’ என்று குறைந்து நின்றது. இக்குறட்பாவில், பிறற்கு, உரியாள், தோள், தோயாதார் என்று கூறியதால் நன்மையடைவார்களின் நல்லுள்ளம் பெறப்பட்டது.

அறம், பேதைமை, ஒழுகும், பகை, பெண்மை, இல்வாழ்வாள், சான்றோர்க்கு, முதலியன திருக்குறளில் காணப்படும் பிற அதிகாரங்களையும் நினைவுபடுத்துவன வாகும். பெட்டு ஒழுகும் - நின்றார் - மன்ற தெளிந்தார்- தினைத் துணையும் தேரான் - எளிதென - பெண்மை நயவாதவன் - நோக்காத - உரியாள் - பிறன் வரையாள் - என்பன கருத்துக்களை நினைவிற்குக் கொண்டு வர உதவி செய்வனவாகும்.