பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 16. பொறை உடைமை பிறன் தனக்குத் தீமை செய்தபோதும் தான் அதன்ை அவன்கண் செய்யாது பொறுத்திருத்தலாகும். நெறியில் நீங்கியவர்களையும் பொறுத்தல் சிறந்த பொறையுடைமை யாகும். முதல் நான்கு குறட்பாக்களிலும் பொறையுடைமை யின் சிறப்புக் கூறப்பட்டது. பிறர் செய்த தீமையினையும் பொறுத்தல் சிறப்பினைத் தரும் என்ற உண்மையினை ஆந்து முதல் எட்டாம் குறட்பா வரை விளக்குகின்றன. கடைசியில் கூறப்பட்டுள்ள இரண்டு குறட்பாக்களும் பொறையுடைமை என்னும் சிறப்பினைப் பெற்றவர்கள் முற்றத் துறந்த முனிவர்களை விடவும் சிறந்தவர்கள் என்று குறிக்கின்றன. பொறுத்தல் தலை - அதனினும் நன்று - வன்மையுள் வன்மை - போற்றி ஒழுகப்படும் - பொன்போல் பொதிந்து - பொன்றும் துணையும் புகழ் - தகுதியால் வென்று விடல் - துய்மை உ ைட ய ர் - நோற்பாரின் பின் . என்று கூறப் பட்டவைகள் எல்லாம் பொறையுடைமை கொண்டவர் களின் மேம்பாட்டினைச் சுட்டிக் காட்டுவனவாகும். ஆறாம் பாடல் ஒரு நாளை இன்பம்" என்று கூறிப் பேருண்மையினை உணர்த்திவிட்டது. * நிலம், நன்று, விருந்து, நிறை உடைமை, ஒழுகப்படும், புகழ், துறந்தார், இன்னாச்சொல் என்பன நூலில் காணப் படும் பிற அதிகாரங்களையும் நினைவு படுத்துவனவாகும். நான்காம் குறட்பாவில் காணப்படும் நிறை உடைமை” என்பதனைச் சிந்திக்கும்போது, காமத்துப் பாலில் கூறப் பட்டுள்ள நிறையழிதல்' என்ற அதிகாரத்தில் கூறப்பட் டுள்ளவைகளையும் சிந்தித்தல் நல்லது. முதற் குறட்பாவில் அழகான உவமை எடுத்துக் காட்டப்பட்டது. பொறுமைக்கு உலகில் போற்றப்படுவது