பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 மாண்டற்கு அரிதாம் பயன்"-"இறல் ஈனும் எண்ணாது வெஃகின்' என்பன வெஃகுதலால் வருகின்ற கொடிய தீமையினை விளக்குகின்றன. சிந்தித்தறிதற்கு உரியன வாகும். வெஃகாமை' என்பதனை செய்ய நினையாதவர்கள் யார் யார் என்பதனையும் அதனால்-வெஃகுதல் செய் யாமையால் வரும் நன்மையினையும், நடுவு அன்மை நாணுபவர்' - மற்றின்பம் வேண்டுபவர்" - "புலம் வென்ற புன்மையில் காட்சியவர்' - விறல் ஈனும் வேண்டாமை என்னும் செருக்கு' என்பவைகள் முறையே குறிக்கின்றன. நடுவு, குடி, பொருள், நாணுபவர், மற்றின்பம், அறிவு, அருள், அறிவுடையார், வேண்டாமை முதலியன நூலில் காணப்படும் பிற அதிகாரங்களை நினைவுபடுத்துவனவாக அமைந்துள்ளன. - 19. புறங்கூறாமை காணாதபோது பிறரை இகழ்ந்து பேசாதிருத்தல். இது மொழிக் குற்றமாகும். முதற் குறள் புறங் கூறாமை" என்ற அறத்தின் நன்மையினைக் கூறுகின்றது. இரண்டாம் குறள் பொய்ச் சிரிப்புச் செய்து புறங் கூறுபவர்களைக் கூறுகின்றது. மூன்றாம் குறள் எதிரில் இருந்து கடுமையான சொற்களைச் சொல்லினும் சொல்லுக என்று குறிக்கின்றது. ஆக முதல் மூன்று குறட்பாக்களும் புறங்கூறுதல் என்ற கொடுமையின் குற்றங்களைக் கூறுகின்றன. நான்கு முதல் ஒன்பது வரையுள்ள குறட்பாக்கள் புறங் கூறுவார்க்கு வரும் குற்றங்களையும் தீமைகளையும் விரித் துரைக்கின்றன. பத்தாம் குறட்பா புறங்கூறுதலை எவ்வாறு