பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 புறங்கூறி வாழ்பவரை, தூற்றும் மரபினார்’ என்று. எட்டாம் குறள் கூறுகின்றது. இப்படிப் பேசுவதையே இயல் பாகக் கொண்டவர்களை மரபினார்' என்றார். 20. பயன்இல சொல்லாமை தமக்கும் பிறருக்கும் அறம் பொருள் இன்பம் ஆகிய பயன்கள் ஒன்றுமே தராத சொற்களைச் சொல்லாதிருத்த லாகும். பயன் உள்ளவைகளைத்தான் சொல்ல வேண்டும் என்பது குறிப்பு. பொய், குறளை, கடுஞ்சொல், பயனில் சொல் ஆக வாக்கின் கண் நிகழும் குற்றங்கள் நான்கு. என்று வகுத்துக் கூறப்படும். கடுஞ்சொல், இனியவை கூறலான் விலக்கப்படும். குறளை, புறங்கூறாமையால் விலக்கப்படும். எல்லோராலும் இகழப்படுவான் என்பதனை முதற் குறட்பா கூறுகின்றது. பலர் முன்னிலையில் பயனில்லாத தைப் பேசுபவன் இழிநிலையினை இரண்டாம் குறள் எடுத்துக் காட்டுகின்றது. பயனில்லாத சொற்களை சிலர் மிகமிக விளக்கமாக விரிவுபடுத்திப் பேசுவதை மூன்றாம். குறள் குறிக்கின்றது. நான்காம், ஐந்தாம் குறட்பாக்கள் அவனை விட்டு, நன்மை நீங்கும், சீர்மை சிறப்பொடு நீங்கும் என்று கூறுகின்றன.

  • புதர்' என்பது நெல்லின் உள்ளிடு இல்லாத உமி' என்பதேயாகும், பயனில்லாத சொற்களைப் பேசுபவனை மக்களிடையே பதர் என்று ஆறாம்.குறட்பா விளக்குகின்றது. ஆக, முதல் ஆறு பாக்களும், பயனில்லாத சொற்களைச் சொல்லுதலின் குற்றத்தினைக் கூறுகின்றன.

ஏழு, எட்டு, ஒன்பது குறட்பாக்கள் பயனில்லாத சொற். களைச் சொல்லாதவர்களின் குணத்தின் சிறப்பினைக் கூறும். பத்தாம் பாடல் சொல்லப்பட வேண்டியனவற்றை: யும், சொல்லத் தகாதவைகளையும் கூறுகிறது.