பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 நட்டார், சொல், பண்பில் சொல், சான்றோர், அறிவி ன்னார், பொச்சாந்தும், என்பன பிற அதிகாரங்களை நினைவு படுத்துவனவாக அமைந்துள்ளன. "எல்லோரும் எள்ளப்படும்’- நயன் இலன் என்பது சொல்லும்’-நயன் சாரா நன்மையின் நீக்கும் - சீர்மை சிறப்பொடு நீங்கும்’-"மக்கட் பதடி எனல்' - என்பன .பயனில சொல்லுவான் அடைகின்ற தீமையினையும் அவனுக்கு வரும் இழிபெயரினையும் காட்டுவனமாகும். பயன் சாராப் பண்பில் சொல், பெரும் பயன் இல்லாத சொல், பொருள் தீர்ந்த-என்பனவற்றால் பயனில்லாத சொற்கள் விளக்கப்படுகின்றன. பத்துக் குறட்பாக்களில் 'பயன் இல' என்று ஆறு குறட்பாக்களில் கூறியது வற்புறுத்தலின் காரணமேயாகும். 21. தீவினை அச்சம் பாவச் செயல்களைச் செய்தற்கு அஞ்சுதல். துன்பம் தரும் செயல்களைச் செய்யாதே என்பதாகும். இதனால் உடம்பால் நிகழ்த்தப் பெறும் தீச்செயல்கள் கூறப்பட்டன. "அச்சம்" என்ற அடைமொழியுடன் இரவு அச்சம்' என்றொரு அதிகாரம் உண்டு. - தீச்செயல் புரியும் இயல்பினர் தீமையான செயல்களைச் செய்வதற்கு அஞ்சமாட்டார்கள் என்று முதற் குறட்பா கூறுகின்றது. நெருப்பினைவிட தீச்செயல் கொடிது என்பதற்குக் காரணம் காட்டுகிறது இரண்டாவது குறட்பா. மூன்றாம் குறட்பா அறிவின் சிறப்பிற்குரிய காரணத்தினை விளக்குகிறது. . ஆக முதன் மூன்று குறட்பாக்களும் தீவினைக்கு மிகுதியும் அஞ்சவேண்டும் என்பதனைக் காட்டுகின்றன. பிறருக்குக் கேடு செய்பவனை அறம் தண்டித்தே தீரும் என்பதனை