பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 யுடையது என்று கூறும் ஐ ந் த ா ம் குறட்பா மிகுதியும் சிந்திக்கத்தக்கதாகும். வைப்புழி என்ற சொல் நயம்பட அமைந்திருப்பது ஆறாம் குறட்பாவில் காணப்படுகிறது. 'பசி ஆற்றல் - பசி என்னும் தீப்பிணி - என்பன ஈகை செய்தல் வேண்டும் என்பதனை மிகுதியும் வற்புறுத்துவன வாகும். நிறைய நிரப்பிக்கொண்டு தாமே உண்ணவேண்டும் என்று எண்ணுகின்ற இழிமனம் படைத்தோரை ஒன்பதாம் குறட்பா இடித்துக் காட்டுகின்றது. சாதல் துன்பம்கூட ஈதல் செய்ய முடியாதபோது உண்டாகும் துன்பத்தினைவிட இனிமையானதாகும் என்று குறிப்பிடுகின்ற பத்தாம் குறட்பா, பி ற ர் க் கு ப் பயன்படாதபோது வாழ்தலே வேண்டாம் என்னும் உண்மையினைக் கூறுகின்றது. பகுத் துண்ணும் ஈகையாளனைத் தீப்பிணி தீண்டவே தீண்டாது என்ற அறிவுண்மை ஏழாம் குறட்பாவில் கூறப்பட்டுள்ளது. இத்துடன் பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல்' என்பன போன்ற குறட்பாக்கள் கருதற்பாலனவாகும். ஆற்றின் அளவறிந்து ஈக" என்ற குறட்பா சிந்தனைக்குரியது. % > 24. புகழ் இவ்வுலகில் செய்யவேண்டிய கடமையறிந்து செய்வன வற்றைச் செய்து இம்மைப் பயன் பெற்று உலகின்கண் மறையாமல் நிற்கும் புகழினைக் கூறுவதாகும். புகழுக்கு மிகுதியும் அடிப்படைக் காரணமாகவுள்ளது ஈகை என்பது குறிப்பிடத்தக்கது. உயிர்க்கு ஊதியம் என்பது இசைபட வாழ்தலேயாகும் என்பதனை முதற்குறட்பா எடுத்துக் காட்டுகிறது. புகழுக்குக் காரணமாக அமைந்துள்ளதென்பது ஈதலேயாகும் என்பதனை இரண்டாம் குறட்பா விளக்கு கிறது. உலகத்தில் அழியாது நிற்பது எது என்பதனை மூன்றாம் குறட்பா கூறுகிறது. ஆக முதல் மூன்று குறட்பாக் களும் புகழது சிறப்பினைக் கூறியனவாகும். அ. வி. -3