பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 எடுத்துக் காட்டின. அடைமொழி கொடுக்கப்படாமல் கூறப் பட்டுள்ள அதிகாரங்களில், இதுவும் ஒன்றாகும். இந்த அதிகாரம் இல்லற இயலின் கடைசி அதிகார மாகும். எச்சம் பெறுதலின் சிறப்பினை எட்டாம் குறட்பா கூறும் செப்பம் உடையவன் ஆக்கம்' - தக்கார் தகவிலர் என்பது - வினைபகை என்றிரண்டின் - எச்சம் என்று என்" - ஊண் உடை- அச்சமே கீழ்களது . என்று தொடங் கப் பெறும் குறட்பாக்களில் வரும் எச்சம்' என்பது சிந்தனைக் குரியதேயாகும். ஒன்பதாம் குறட்பா, புகழில்லாதவர்களைத் தாங்கிய நிலமும் பயனற்றதாகி விடும் என்று கூறி வளப்பம்குன்றும்" என்று குறிப்பிட்டது மிகுதியும் கருதற்குரியது. ஊதியம், புலவர், நத்தம், சாக்காடு, வித்தகர், யாக்கை முதலிய சொற்கள் அரிய உண்மையினை நினைவில் நிறுத்த உதவு வனவாகும். - துறவறவியல் 25. அருள் உடைமை தொடர்பான பற்றுதல் இல்லாமல் எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணையாகும். இல்லறத்திற்கு அன்புடமை போல துறவறத்திற்கு சிறந்ததாதலால் முதற் கண் வைத்துக் கூறப்பட்டதாகும். அருட் செல்வத்தின் சிறப்பினையும் அதனை நோக்குங் கால் பொருட்செல்வத்தின் இயல்பினையும் முதலாவது பாடல் கூறுகின்றது. பொருட் செல்வம் எல்லோரிடத்திலும், நல்லவர் தீயவர், பண்பாளர் பண்பில்லார் என்ற பாகு பாடின்றி இருத்தல் கூடும். அருளுடைமை அவ்வாறு எல்லோரிடத்திலும் காணப்படுவதன்று. இரண்டாவது குறட்பாவில்அரிய பெரிய பல உண்மைகள் பொதிந்துள்ளன. ...நல் ஆற்றான் என்பது அருள்ர்ளர்கள் அறியும் பல மெய்