பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40° யுணர்வு உண்மைகளைக் கூறுகின்றன என்று இரண்டாம் குறட்பா மெய்ப்பிக்கும். அருளல்லாமல் வேறு துணை துற வற நெறிக்கு இல்லையென்பதாகும். முதலிரண்டு பாக்களும் அருளினது சிறப்பினைக் கூறும்.

  • அருளுடைமை அதிகாரத்தில் காணப்படும் கம்பால் கள் ஒவ்வொன்றும் ஆழ்ந்த பேரின்ப உண்மைகளைக் கூறு வதால் மெய்ந்நிலையுணர்த்தும் நான்கள் பலவற்றிலும் கூறம் படும் உண்மைகளை அறிந்து புரிந்துகொள்ளுதல் வேண்டும்.

மூன்றாம் குறட்பா துன்ப உலகத்தில் அருளாளர்கள் புகமாட்டார்கள் என்று கூறுகிறது. பேரின்பமாகிய வீட்டுல கம்அவர்களுக்கு உரியதாகும். இன்னா உலகம்' என்பதனை நரகம்’ என்பது உலக வழக்கு, துன்பமே அருளாளர்களுக்கு இல்லை என்பதனை நான்காம் - குறட்பா விளக்கு கின்றது. எனவே, மூன்று, தான்கு, ஐந்து ஆகிய பாடல்கள் அருளாளர்களுக்கு இருமையினும் துன்பம் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றன. ஆறுமுதல் ஒன்பதாம் பாடல்வரை அருளாட்சி அற்றவர்களுக்கு வரும் குற்றம் கூறப்பட்டது. பத்தாம் பாடல் அருள் பிறப்பதற்கான வழியினைக் கூறு கின்றது. அருள் ஆள்வார்களுக்கு துன்பம் உண்டாவதை ளக் காலத்திலும் எந்த இடத்திலும் யாரும் கண்டறிய முடியாது என்பதை உணர்த்தவே, ஐந்தாம் பாடல் வளி வழங்கு மல்லல் மாஞாலம் கரி என்று குறிப்பிட்டது. உலக மக்கள் கண்டறிந்ததில்லை என்பதாகும், அருள் நெஞ்சத்தில் பிறந்: திருப்பதென்பது மூன்றாம் பாடலால் விளங்குகிறது. உறுதிப் பொருள்களான அறம் முதலியனவற்றையே ஆறாம். குறள் பொருள்' என்று குறிப்பிட்டது. o வீடு என்பது ಆಸಿ೦ಹ துறந்த அருளாளர்கள் அடையும் பேரின்பத்தினைக் குறிப்பதாகும். அது ஒரு நிலை என்று.