பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51 காட்டுவது இத்தகைய பெருமைதான் வாய்மைக்கு உண்டு என்று அளந்த்றியமுடியாத எல்லைக்கு கருத்தினைக்கொண்டு செலுத்துவதாகும். மனத்தினைத் தூய்மைப்படுத்தும் செயல் வாய்மையொன்றினால்தான் முடியும் என்பதனை எட்டாம் .பாடல் எடுத்துக்காட்டுகிறது. தன்னையே முன்நிறுத்தி ஆசிரியர் பத்தாம் குறட்பாவில் பேருண்மையினைப் புலப்பட வைத்தார். சொல்ல, அறிவது, ஒழுக்கின், தவம், தானம், புகழ், அறம், சான்றோர் என்பனவாகக் காணப்படும் சொற்கள் .பிற அதிகாரங்களின் கருத்துக்களை நினைவுபடுத்துவனவாக உள்ளன. தீமை இலாத சொலல் - உள்ளத்துள் எல்லாம் உளன் - தவத் தொடு தானம் செய்வாரின் தலை எல்லா அறமும் தரும் - செய்யாமை செய்யாமை நன்று - பொய்யா விளக்கே விளக்கு - வாய்மையின் நல்லபிற, என்று குறிக்கப் பட்டுள்ளவைகளை நினைவில் நிறுத்தி ஆழ்ந்த உண்மைகளை .உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். வாய்மை என்பது கடுமை .யான நோன்புகளில் ஒன்று ஆனபடியால் சிறப்பாகப் பற்றற்ற துறவிகளுக்குக் கூறப்பட்டது. பொதுத் தன்மையில் அனைவர்க்கும் ஏற்றதேயாகும். 31. வெகுளாமை சினம் கொள்ளாதிருத்தலாகும். கோபம் கொள்ளுவ தற்குக் காரணம் உள்ள போதும் அதனைச் செய்யாமை .யினைக் கூறுவதாகும். முதற்குறட்பா வெகுளாமைக்கு இடம் எதுவென்பதனைக் கூறுகின்றது. இரண்டு, மூன்று, நான்கு ஆகிய மூன்று பாடல்களும் கோபத்தினுடைய தீங்கினைக் கூறுகின்றன. ஐந்து, ஆறு, ஏழு ஆகிய பாடல்கள் வெகுண் டார்க்கு வரும் தீங்கினை எடுத்துரைக்கின்றன. கோபம் கொள்ளாதிருப்பதால் வருகின்ற நன்மையினை எட்டாம் குறட்பா விளக்குகின்றது. கோபம் கொள்ளாதவர்கன் அடையும் நன்மையினை ஒன்பதாம் பாடல் குறிக்கின்றது.