பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 வலிமை மேம்பட்ட ஊழினை . செயற்கை யென்னும் முயற்சி வெல்லுதல் கூடாதென்பதாகும். - உலகில் காணப்படும் அனைத்தும் இயற்கையால் அமைக்கப்பட்டனவாகும். அனைத்தும்' என்பது இயற்கை யால் மட்டும் அமைந்துள்ளனவாகும். மனித செயற்கை யால் அமைந்தனவும் இவ்வுலகில் எண்ணிறந்தவுைண்டு. நடப்பவை அனைத்தும் இயற்கையினாலேயேயாகும் என்று கூறுவதும், செயற்கை என்னும் முயற்சியால் அனைத்தும் கூடும் என்பதும்,இயற்கையின் விதிகட்குப் புறம்பானதாகும். இரண்டிற்கும் உள்ள அளவுத்தன்மையினைப் புரிந்தறிதல் வேண்டும். ஊழ்வினை இருந்தால்தான் சிலவற்றைச் செய்தல் கூடும், அடைதல்கூடும் என்பது இயற்கை விதிக்குப் புறம்பானதல்ல. செயற்கை யென்னும் மனித முயற்சி முயன்ற அளவு கூலி தரும் என்பது மனித அமைப்பிற்குரிய உண்மையுமாகும். பொருட்பால்-அரசியல் 39. இறை மாட்சி நாட்டிற்குத் தலைவனான மன்னனைக் கூறுவதாகும். அரசனுடைய நற்குண நற்செயல்கள் விளக்கப்படுவதாகும். மக்களைக் காப்பாற்றும் பொறுப்புள்ளவனானபடியால் 'இறை என்று கூறினார். மன்னனை இறைவன் என்றும் பல குறட்பாக்கள் கூறுகின்றன. மாட்சி என்பது சிறப்பு என்று பொருள்படும். மாட்சி' என்ற அடைமொழியுடன், 'படைமாட்சி பகைமாட்சி என்ற அதிகாரங்கள் காணப் படுகின்றன. -