பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 'கற்றதனால் ஆய பயன் என்' - உலகத்தோடு ஒட்ட ஒழுகல்-'பல நல்ல கற்ற கடைத்தும்’- ஓதி உணர்ந்தும்' என்று வருவன போன்ற குறட்பாக்களையும் உடன் வைத்து அறிந்துணர வேண்டும். 4.1 . கல்லாமை கற்றலைச் செய்யாதிருத்தலாகும். கல்லாமை இழி வெனக் கருதப்படும். முந்திய அதிகாரத்தில் கூறப்பட்ட கல்வியின் சிறப்பு மேலும் தொடர்ந்து இந்த அதிகாரத்தில் கூறப்படுகின்றது. முதல் மூன்று குறட்பாக்களும் கல்லாத வர்கள் அவையின் கண் சொல்லுதற்கு உரியவர்களல்லர் என்பதனைக் காட்டுகின்றன. நான்காம் ஐந்தாம் பாடல்கள் கல்லாதாரது இயற்கையறிவின் குற்றத்தினைக் கூறுகின்றன. ஆறாம் பாடல் கல்லாதாரது பயன்படாத் தன்மையினைக் குறித்துக் காட்டுகின்றது. கல்லாதாரது வடிவழகு பயனற்றது என்பதனை ஏழாம் குறட்பா காட்டுகிறது. கல்லாதவனிடத்தில் இருக்கும் செல்வத்தின் குற்றத்தினை எட்டாம் பாடல் குறிக்கின்றது. ஒன்பதாம் பாடல் கல்லாதான் உயர்ந்தோர் குலத்தில் பிறந்திருந்தாலும் மதிக்கப்படமாட்டான் என்று கூறு கின்றது. பத்தாம் பாடல், கல்லாதான் மக்களிடையே பிறந் திருந்தாலும், மக்கட் பிறவியால் பயன் எய்த மாட்டான் என்பதைக் சுட்டிக் காட்டிற்று. முதற் குறட்பாவில் உருண்டை உருட்டியாடும் அரங்கி னைக் காட்டியும்,இரண்டாம் பாடலில் பக்குவம் அடையாத இளமையான சிறுமியின் உறுப்பினைக் காட்டியும், ஆறாம் பாடலில் களர் நிலத்தினைக் குறித்தும், ஏழாம் பாடலில் மண்பாவையினைக் காட்டியும், பத்தாம் பாடலில் விலங் கினைக் காட்டியும் கூறிய அனைத்தும் கல்லாதாரது மிகமிக இழிவான வாழ்வினை விளக்கம் செய்வனவாக அமைந்