பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 துள்ளன. இரண்டாம் பாடல் பக்குவம் அடையாத சிறுமிக்கு உறுப்புகள் இல்லாதபடியால் கல்லாதவனுக்கு சொற்கள் கூறுவதற்கான எண்ணம் உதிக்காது என்பதாகும். அப்படி எண்ணம் வந்தாலும் பயனற்றதாகிவிடும். அரங்கு, கோட்டி, பெண், நல்லார், ஒட்பம், தகைமை, மாத்திரை, களர், எழில், மண், பாவை, திரு, பாடு, விலங்கு, நூல் என்ற சொற்கள் நினைவில் நிறுத்தப்பட்டு அரிய உண்மைகளை உணர உதவுவனவாக அமைந்துள்ளன. 42. கேள்வி கேட்கப்படும் நூற் பொருள்களைக் கற்றறிந்தார் கூறக் கேட்டல் வேண்டும் என்பதாகும். கற்றறிந்தார் கேட்க அறிவு வளர்ச்சியில் மேம்படுவர். கல்லாதார் கேட்டவழி அதனைக் கற்ற நன்மையினை அடைவர். முதலிரண்டு பாடல்களும் கேள்வியது சிறப்பினைக் கூறுகின்றன. மூன்றாடம் பாடல் கேள்வியறிவு உடையாரது சிறப்பினைக் கூறுகின்றது. நான்கு முதல் ஏழாம் பாடல் வரை கேட்டார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது. கடைசி மூன்று பாடல்கள் கேள்விஞானம் இல்லாதாரது குற்றத்தினைக் குறிக்கின்றன. கேள்வியுணர்வு இல்லாதார் சாவினும், வாழினும் உலகிற்கு வருவது என்ன என்று பத்தாம் பாடல் கூறியது சிந்தனைக்குரியது. செவிச் செல்வம் - செவிக்கு உணவு - ஆன்றாரோடு ஒப்பர் . ஊற்றாம் துணை ... ஊற்றுக் கோல் - பெருமைதரும் என்று குறித்துக் காட்டுவன வெல்லாம் கேள்விச் செல்வம் மிகவும் நன்மை பயக்கக் கூடியது என்பதனை வலியுறுத்து கின்றன. கேள்விச் செல்வம் உடையர் இப்பூமியில் வாழ்ந்தா ராயினும் வானுலகத் தேவரோடு ஒப்பர் என்று கூறி,